பொதுவாகவே மலைப்பகுதிகள் என்றாலே இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளாகவே இருக்கும். இதற்கு எடுத்துக்காட்டாக திண்டுக்கல் சிறுமலை அமைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் அமைந்துள்ள சிறுமலைக்கு திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து மணி நேரத்திற்கு ஒரு முறை தென்மலை செல்லும் பேருந்து பயணிகளை ஏற்றி செல்கிறது.இவ்வாறு பேருந்தில் செல்லும் பயணிகள் நத்தம் சாலையில் உள்ள மேம்பாலத்தை கடந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் வலது புறமாக சென்று சிறுமலை நோக்கி பயணிக்க வேண்டும்.
ஆனால் பெரும்பாலான பயணிகள் பேருந்தில் செல்ல விரும்ப மாட்டார்கள், ஏனென்றால் பேருந்தில் சென்றால் சிறுமலை இயற்கை அழகினை முழுவதுமாக ரசிக்க முடியாது.
எனவே சிறு மலையை சுற்றிப் பார்க்கச் செல்லும் நபர்கள் தங்களது சொந்த வாகனங்களில் செல்வதே நல்ல அனுபவத்தை தரும்.
சிறுமலையை நோக்கி இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் செல்பவர்கள் சிறுமலை சோதனை சாவடியை கடந்த உடன் மலைப்பாதை தொடங்கிவிடும்.
இந்த மலைப்பாதை உச்சியை அடைய 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் நான்காவது கொண்டை ஊசி வளைவை கடந்தவுடன், ஜில் என்ற குளிர் காற்றும், காற்றுடன் கூடிய மூலிகை நறுமணத்தையும் உணரலாம்.
சிறுமலையின் 17 வது கொண்டை ஊசி வளைவில் அமைந்துள்ள உயர் கோபுரத்தில் மேலே சென்று மலையின் இயற்கையின் பிரமிக்க வைக்கும் அழகிய காட்சிகளை காண்டு ரசிக்கலாம்.
அதனை தொடர்ந்து சிறுமலை புதூர் கிரமாத்திற்கு முன்பு 2010ம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட சிறிய நீர் தேக்கம் அமைந்துள்ளது. இதில் வாரம் இறுதியில் போதுமான நீர்வரத்து இருந்தால் மட்டும் படகு சவாரி அனுமதிக்கப்படும்.
இந்த புதூர் கிராமத்தை கடந்து செல்லும் வழியில் அப்பகுதி மக்கள் அதிக அளவில் விளைவிக்கப்படும் பலாப்பழம், சிறுமலை வாழை, மிளகு போன்றவற்றை காணலாம்.
இதனைத் தொடர்ந்து மலை உச்சியில் அமைந்துள்ள அகஸ்தியர்புரம் சென்றால், மலை உச்சியில் உள்ள வெள்ளிமலை சிவன் கோவிலில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் உள்ளது.
அகஸ்தியர்புரத்தில் சிவசக்தி சித்தர் பீடம் என்ற ஆசிரமம் அமைந்துள்ளது, இந்த ஆசிரமத்தில் வெள்ளிமலை சிவன் கோவில் தோன்றிய வரலாறு, மற்றும் பொதுவாகவே கோவிலுக்கு செல்லும் பக்தர்கள கோவிலுக்கு செல்லும் முன்பும், சென்ற பின்பும் எப்படிப்பட்ட வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற வாசகங்களும் எழுதி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆசிரமத்தில் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் அன்னதானம் வழங்கப்படுவது தனிச் சிறப்பு.
இங்கிருந்து சிவபெருமானை தரிசனம் செய்ய சுமார் அரை மணிநேரம் காட்டுப்பகுதியில் மலை ஏறிச்செல்ல வேண்டும். இக்கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மலையேறி செல்லும் வழியில் செல்பி எடுத்து மகிழ்ந்து வருவதுடன், மலை உச்சியில் உள்ள வெள்ளிமலை கோவில் பின்புறம் சென்று இயற்கை காட்சிகளை ரசித்து புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கமான ஒன்று.
மேலும் இக்கோவிலில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் சுற்றுவட்டார பொதுமக்கள் பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
திண்டுக்கல்லில் இப்படிப்பட்ட சிவன் கோவில், மினி கொடைக்கானல் என்று திண்டுக்கல் பொதுமக்களால் அழைக்கப்படும் சிறுமலையில் அமைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dindugal, Local News, Tourism