முகப்பு /செய்தி /திண்டுக்கல் / ரூ.2,000 நோட்டுக்கு பாடைக் கட்டி ஒப்பாரி: திண்டுக்கலில் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்

ரூ.2,000 நோட்டுக்கு பாடைக் கட்டி ஒப்பாரி: திண்டுக்கலில் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்

காங்கிரஸ் போராட்டம்

காங்கிரஸ் போராட்டம்

திண்டுக்கலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக 2,000 ரூபாய் நோட்டுக்கு பாடை கட்டி மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Dindigul, India

Dindigul Congress Oppari Protest : இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திண்டுக்கல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக 2,000 ரூபாய் நோட்டுக்கு பாடை கட்டி மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவோ/ மாற்றிக் கொள்ளவோ செப்டம்பர் 30ந் தேதி வரை அனைத்து வங்கிகளையும் அணுகலாம் என்றும் ஆர்பிஐ தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், நேற்று மாலை திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் திண்டுக்கல் மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் வாசிக்க2000 ரூபாய் நோட்டு விவகாரம்: உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இதோ...

ஆர்ப்பாட்டத்தின் போது 2,000 ரூபாய் நோட்டுகளை கட்டு கட்டாக வைத்து அதனை பாடை கட்டி மாலை அணிவித்து சங்கு ஊதி கொல்லி வைத்து பெரியோர்கள் ஒப்பாரி வைத்து என நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

top videos
    First published:

    Tags: Congress, Dindugal, Protest, RBI