முகப்பு /திண்டுக்கல் /

குடியிருந்த வீட்டை சாய்பாபா கோயிலாக மாற்றிய திண்டுக்கல் இளைஞர்.. குவியும் பக்தர்கள்!

குடியிருந்த வீட்டை சாய்பாபா கோயிலாக மாற்றிய திண்டுக்கல் இளைஞர்.. குவியும் பக்தர்கள்!

X
சாய்பாபா

சாய்பாபா கோயில்

House as Saibaba Temple : திண்டுக்கல்லில் இளைஞர் ஒருவர் தான் குடியிருந்த வீட்டையே பிரம்மாண்டமான சாய்பாபா கோயிலாக மாற்றி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார்.

  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் நாகல் நகர் பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீரடி சாய்பாபா கோவில். இந்த ஆலயம் சிதம்பரம் -ரா முத்தாயம்மாள் தம்பதியரின் மகன் சாய்முருகன் அவர்களால் உருவாக்கப்பட்டது. தாய் தந்தையுடன் வாழ்ந்து வந்த சாய்முருகன், பெற்றோர்களின் மறைவிற்கு பிறகு அவர்களின் நினைவாக தான் வாழ்ந்து வந்த வீட்டையே சாய் பாபாவின் ஆலயமாக அமைத்துவிட்டதாக கூறுகின்றனர்.

சாய்முருகன் என்பவர் கனவில் சாய்பாபா தோன்றி இங்கு பெரிய ஆலயம் அமைக்க வேண்டும் என்று காட்சி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது வீட்டையே பிரமாண்டமாக சாய் ஆலயம் அமைத்து தற்போது இந்தக் கோவிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாய்பாபாவை தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு பாபாவிற்கு பக்தர்கள் திருக்கரங்களால் விபூதி அபிஷேகம், பால் அபிஷேகம் நடைபெற்று வருகின்றது.

சாய் பாபா வாழ்ந்த காலத்தில் ஏழை ,எளியோரின் பசியை போக்க யாசகம் பெற்று பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி அதன் மூலம் ஏழை, எளியோரின் பசியை போக்கி உள்ளார்.

அவரது வழியில் இந்த ஆலயத்திற்கு தினசரி வரும் பக்தர்கள் தங்கள் குறைகளையும் வேண்டுதலையும் சாய்பாபாவிடம் முறையிட்டு செல்கின்றனர். பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறிய பிறகு, பக்தர்கள் கோவிலில் அன்னதானம் செய்து சாய்பாபாவை வழிபட்டு வருகின்றனர்.

இங்கு தினந்தோறும் ஏராளமான ஏழை, எளியோருக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் அன்னதானம் நடைபெறுவது தனிச்சிறப்பாக இருக்கிறது. சாய்பாபா கோவிலில் வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு மற்றும் பக்தர்கள் திருக்கருங்களால் சாய்பாபாவுக்கு பாலபிஷேகம் விபூதி அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெறுவது வழக்கம்.

இப்படி திண்டுக்கல் மாநகர் மைய பகுதியில் தாய், தந்தை நினைவாக மகன் சாய்பாபா ஆலயம் அமைத்து அனைவரது பசியை போக்கி வரும் நிகழ்வு அனைவரையும் மகிழ்ச்சி அலையில் ஆழ்த்தி உள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Dindigul, Local News, Saibaba