முகப்பு /திண்டுக்கல் /

திண்டுக்கல்லில் ஹைதர் அலி, திப்பு சுல்தான் மணிமண்டபம்... விசிட் அடிக்க தவறாதீங்க!

திண்டுக்கல்லில் ஹைதர் அலி, திப்பு சுல்தான் மணிமண்டபம்... விசிட் அடிக்க தவறாதீங்க!

X
திண்டுக்கல்

திண்டுக்கல் மணிமண்டபம்

Dindigul Tourist spot | திண்டுக்கல்லில் உள்ள ஹைதர் அலி திப்பு சுல்தான் மணிமண்டபத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் சுவாரஸ்யமான வரலாறு பற்றிய ஒரு தொகுப்பை பார்க்கலாம்.

  • Last Updated :
  • Dindigul, India

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல்லில் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த கல்வெட்டுகளுடன் கூடிய மணி மண்டபம் பலரும் விரும்பிப் பார்க்கூம் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

திண்டுக்கல் என்றாலே, பல்வேறு முக்கிய சுற்றுலா தலங்கள் அமைந்திருக்கும் இடமாகவே மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. திண்டுக்கல்லில் அமைந்துள்ள ஹைதர் அலி, திப்பு சுல்தான் மணிமண்டபம் கட்டுவதற்கு பல்வேறு தரப்பினர் பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு, பின்னர் அமைக்கப்பட்டது, இந்த மணிமண்டபம். இது, கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் திறக்கப்பட்டது.

இதையும் படிங்க | சிலம்பம் சுற்றி அசத்திய மாணவர்கள்.. திண்டுக்கல்லில் உலக சாதனை நிகழ்வு..

பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் என ஏராளமானோர் வந்து செல்லும் மணிமண்டபத்தை, ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமாக போராடிய ஹைதர் அலி மற்றும் திப்புசுல்தான் அவர்களது வாழ்க்கை வரலாறு மற்றும் பிறப்பு , மறைவு , ஆட்சி அதிகாரம் , மைசூர் போர்கள் குறித்த விவரங்கள் மற்றும் அவர்களின் விபரங்கள் உள்ளிட்டவை கல்வெட்டுகளாய் பொறிக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்காக திண்டுக்கல் மலைக்கோட்டையில் மாமன்னர் திப்பு சுல்தான் அவர்களால் கட்டப்பட்ட தடுப்பு சுவர் மற்றும் மைசூரில் அமைந்துள்ள திப்பு சுல்தான் அரண்மனை , போரில் திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள் , மைசூர் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அமைந்துள்ள திப்பு சுல்தான் அவர்களின் நினைவிடம், திண்டுக்கல் மலைக்கோட்டையில் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்காக திப்பு சுல்தான் நிறுவப்பட்ட பீரங்கி உள்ளிட்டவை புகைப்படமாக மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் மணிமண்டபத்தை சுற்றி பல்வேறு வகையான அழகுச் செடிகள் பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Dindigul, Local News, Tourist spots