முகப்பு /திண்டுக்கல் /

சிலம்பம் சுற்றி அசத்திய மாணவர்கள்.. திண்டுக்கல்லில் உலக சாதனை நிகழ்வு..

சிலம்பம் சுற்றி அசத்திய மாணவர்கள்.. திண்டுக்கல்லில் உலக சாதனை நிகழ்வு..

X
சிலம்பம்

சிலம்பம் சுற்றி அசத்திய மாணவர்கள்

World Record Event in Dindigul | திண்டுக்கல் மாவட்டம் காட்டுமடம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் உலக சாதனைக்காக சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணா புரம் அருகே காட்டுமடம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் உலக கலைகள் மற்றும் விளையாட்டு சாதனை புத்தகம் இயக்கம் சார்பில் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்வில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தினர். மேலும் தேனி, மதுரை கோயம்புத்தூர், திண்டுக்கல்உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வீர விளையாட்டான சிலம்பம் சுற்றுதழில் பங்கேற்ற ஒவ்வொரு மாணவர்களும் தங்களுக்கு நன்கு தெரிந்த சிலம்பத்தில் ஒரு சில வகையான, அலங்கார சிலம்பம் சுற்று, போர் சிலம்பம் சுற்று, நிலைபாரங்கள் சுற்று, என பல்வேறு விதமான சுற்றுகளை இரண்டு மணி நேரம் இடை விடாமல் சுற்றினர்.

சிலம்பம் சுற்றி அசத்திய மாணவர்கள்

இவ்வாறு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு உலக கலைகள் மற்றும் விளையாட்டு சாதனை புத்தகம் இயக்கம் சார்பில் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் இந்த இயக்கத்தின் சார்பில் திண்டுக்கல்லில் , மாலப்பட்டி, வாழைக்காய் பட்டி பிரிவு , பஞ்சம்பட்டி, வண்ணப்பட்டிஆகிய 4 இடங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு கட்டணமாக 300 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது, மேலும் சிலம்பம் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள், கட்டணம் செலுத்த இயலாத நிலையில் உள்ளவர்களுக்கும் இலவசமாக பயிற்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். சிலம்பம் கற்றுக்கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் இந்த நம்பரை 63828 31567 தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Dindigul, Local News