முகப்பு /திண்டுக்கல் /

திண்டுக்கல் உன்மத்த பைரவர் - வெற்றி வராஹி திருக்கல்யாண வைபவம்!

திண்டுக்கல் உன்மத்த பைரவர் - வெற்றி வராஹி திருக்கல்யாண வைபவம்!

X
உன்மத்த

உன்மத்த பைரவர் - வெற்றி வராஹி திருக்கல்யாண வைபவம்

Dindigul Varahi Amman Temple : திண்டுக்கல் ஜான் பிள்ளை சந்தில் உள்ள ஸ்ரீவெற்றி வராஹி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீஉன்மத்த பைரவர்-ஸ்ரீ வராகி அம்மன் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் ஜான் பிள்ளை சந்தில் உள்ள ஸ்ரீ வெற்றி வராஹி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீ உன்மத்த பைரவர்-ஸ்ரீ வராகி அம்மன் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் உள்ள ஸ்ரீ வெற்றி வராஹி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வகிறது. இதன் முக்கிய நிகழ்வான ஸ்ரீ உன்மத்த பைரவர்-ஸ்ரீ வராகி அம்மன் திருக்கல்யாணம் வைபவத்தின்போது, விநாயகர் பூஜை, வாஸ்து பூஜை, புண்யாசகம், கலச ஆவாகனம், அஷ்டதிக் பாலகர் பலி பூஜை நடைபெற்று, அதே தெருவில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவிலில் இருந்து மாப்பிள்ளை வீட்டார் ஸ்ரீ உன்மத்த பைரவரை அழைத்து வந்தனர்.

இந்நிலையில், ஸ்ரீ வெற்றி வராகி அம்மனை கோவிலில் இருந்து பெண் வீட்டார் ஸ்ரீ வெற்றி வராகியை அழைத்து வந்தனர். அர்ச்சகர் மந்திரங்கள் முழங்க கோவில் பூசாரியால் திருமாங்கல்ய நாண் பூட்டப்பட்டது. பின்னர் சுவாமிகளுக்கு நனுங்கு சுற்றப்பட்டது. தேங்காய் உருட்டு, அப்பளம் நொறுக்குதல், பூப்பந்து உருட்டு ஆகிய விளையாட்டுகள் சுவாமிகள் சார்பாக, அர்ச்சகரும், பூசாரியும் விளையாடினார்கள். பிறகு சாமிக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

உன்மத்த பைரவர் - வெற்றி வராஹி திருக்கல்யாண வைபவம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த விழாவைக்காண, திண்டுக்கல் மாநகரிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த வைபவத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு மாங்கல்ய பிரசாதமும், பக்தர்கள் அனைவருக்கும் திருக்கல்யாணம் விருந்து வழங்கப்பட்டது.

First published:

Tags: Dindigul, Local News