முகப்பு /திண்டுக்கல் /

திண்டுக்கல் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா.. பறவை காவடி எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்!

திண்டுக்கல் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா.. பறவை காவடி எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்!

X
திண்டுக்கல்

திண்டுக்கல் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

Dindigul Samayapuram Mariamman Temple : திண்டுக்கல் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர்.

  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மேட்டு ராஜாக்காப்பட்டியில் அமைந்துள்ளது சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்த கோவிலானது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து, கைப்பிடி மண்ணெடுத்து வந்து உருவாக்கப்பட்ட கோவில் ஆகும். மேலும் கோவிலில் வீற்றிருக்கும் தெய்வத்திற்கு குழந்தை வரம் தரும் சமயபுரம் மாரியம்மன் என்ற பெயரும் உண்டு.

இந்த கோவிலில் 9ம் ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பக்தர்கள் அழகு குத்தி பறவை காவடி ஆடி வந்தனர். அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் பூசாரி பாண்டி என்பவருக்கு மேட்டுராஜாக்காபட்டியில் அமைந்திருக்கும் தெப்பக்குளத்தில் வைத்து அலங்காரம் செய்து முதுகில் மற்றும் பிண்ணந்தொடையில் அழகு குத்தி அருள் இறக்கி 4 சக்கர வாகனத்தின் மேல்பகுதியில் பறவை பறப்பது போல அமைப்புடைய காவடியை செய்து, அதில் பறவை காவடி அழகு குத்தியவரை பறக்க வைப்பதுபோல கட்டி, பக்தர்கள் அக்கினிச்சட்டி ஏந்தி பக்தி பரவசத்துடன் தார தப்பட்டை முழங்க ஊர்வலம் வந்தனர்.

பறவை காவடி எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்

இந்த ஊர்வலத்தின்போது பக்தர்கள் பத்ரகாளியம்மன் வேடமிட்டும், பெண்களும் ஆண்களும் தீச்சட்டியை ஏந்தியவாறு தாரதப்பட்டை இசைக்கு ஏற்ப பக்தி பரவரத்துடன் நடனமாடிக் கொண்டும் சென்றனர். இவ்வாறு நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக வந்த ஊர்வலம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தடைந்ததும், தீச்சட்டி ஏந்தியவாறு பக்தர்கள் அம்மனை தரிசித்து விட்டு மீண்டும் தெப்பகுளத்திற்கு ஊர்வலமாக சென்று நேர்த்திகடனை நிறைவேற்றும் வகையில் ஏந்தி வந்த தீச்சட்டியை குளத்தில் கரைத்து விட்டு கோவிலுக்கு சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    கோவிலில் சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.

    First published:

    Tags: Dindigul, Local News