முகப்பு /திண்டுக்கல் /

திண்டுக்கல் மக்களே உஷார்... முக்கிய பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு..!

திண்டுக்கல் மக்களே உஷார்... முக்கிய பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு..!

நத்தம் பகுதியில் நாளை மின்தடை

நத்தம் பகுதியில் நாளை மின்தடை

dindigul power cut | திண்டுக்கல் மாவட்டம், நத்தம் உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (27-04-2023) வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

  • Last Updated :
  • Dindigul, India

பராமரிப்பு பணி காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படவுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழக மின் வாரியம், துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை அனுப்பி, மின் மாற்றி,மின் விநியோகப் பெட்டி உதவியுடன் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை விநியோகம் செய்கிறது. மின் வாரிய சாதனங்களில் எப்போதும் மின்சாரம் செல்வதால், அதிக வெப்பத்துடன் இருக்கும். அவற்றில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். அதன்படி பராமரிப்பு பணி நடைபெறும் நாட்களில், குறிப்பிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்த விவரம் பத்திரிகைகள், குறுஞ்செய்திகள் மூலமாக நுகர்வோருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (27-04-2023) வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தகவல் தெரிவித்துள்ளார்.

மின்தடை பகுதிகள்

அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நத்தம், கோவில்பட்டி செல்லப்பநாயக்கன் பட்டி பொய்யாம்பட்டி மூங்கில்பட்டி ஊராளிபட்டி சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி கோட்டையூர், சிறுகுடி பூசாரிபட்டி, பூதகுடி பன்னியாமலை, உலுப்பகுடி காட்டுவே லம்பட்டி ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம் பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் வினியோகம் தடை செய்யப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Dindugal, Local News