முகப்பு /திண்டுக்கல் /

8 ஆண்டுகளாக நடைபெறும் மேம்பால பணி.. பயன்பாட்டுக்கு கொண்டுவர திண்டுக்கல் மக்கள் கோரிக்கை..

8 ஆண்டுகளாக நடைபெறும் மேம்பால பணி.. பயன்பாட்டுக்கு கொண்டுவர திண்டுக்கல் மக்கள் கோரிக்கை..

X
மேம்பால

மேம்பால பணி நடைபெறுவதால் பல கிலோமீட்டர் வரை சுற்றி வருவதாக பொதுமக்கள் வேதனை

Dindigul Flyover Working : 8 ஆண்டுகளாக நடைபெறும் மேம்பால பணியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என திண்டுக்கல் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் நகர் பகுதியில், நகிரின் எல்லையில் இருந்து சிலுவத்தூர் செல்லும் சாலையில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் திண்டுக்கல்-பழனி, திண்டுக்கல்-கரூர், திண்டுக்கல்-திருச்சி என டுத்தடுத்து 3 ரயில்வே பாதைகள் உள்ளன.

இதனால் அடுத்தடுத்து ரயில்வே கேட் மூடப்படுவதால் திண்டுக்கல் புறநகர் பகுதியில் இருந்து கோவிந்தராஜ் நகர், கொல்லம்புதூர், மாசிலாமணிபுரம், ராஜக்காபட்டி, சிலுவத்தூர் மற்றும் ஏர்போட் நகர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டு வந்தனர்

இது தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு கோரிக்கையை முன் வைத்த பிறகு, ரயில்வே தண்டவாள பகுதியில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யட்டது. அதன்டிப, கடந்த 2013ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கப்பட்டு இப்பணிகள் தொடங்கப்பட்டன.

8 ஆண்டுகளாக நடைபெறும் மேம்பால பணி

எனினும், பல்வேறு காரணங்களால், இடையில் சுமார் மூன்று வருட காலமாக கிடப்பில் போடப்பட்டது. இதன் பிறகு தற்போது மேம்பால பணிகள் தீவிரமடைந்து முடிவு பெறும் தருவாயில் இருப்பதால், பொதுமக்கள் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக அனுபவித்த சிரமங்களிலிருந்து விடுபட போகிறோம் என, நிம்மதி அடையத் தொடங்கினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த மேம்பால பணியானது 97 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதால் விரைந்து பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    First published:

    Tags: Dindigul, Local News, Southern railway