முகப்பு /திண்டுக்கல் /

'தண்டட்டி போடலனா திட்டுவாங்க' திண்டுக்கல் பாட்டி அசத்தல் பேச்சு!

'தண்டட்டி போடலனா திட்டுவாங்க' திண்டுக்கல் பாட்டி அசத்தல் பேச்சு!

X
திண்டுக்கல்

திண்டுக்கல் மூதாட்டி

Dindigul news | கிராமப்புறங்களில் இன்றும் மூதாட்டிகள் தண்டட்டி போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

  • Last Updated :
  • Dindigul, India

தண்டட்டி என்பது 1970களில் உள்ள பெண்கள் அணியும் காதணி வகைகளில் ஒன்று. இந்த தண்டட்டி இயல்பாக காதுகளில் அணியும் தோடுகள் போன்று இல்லாமல் தோடுகளை விட பெரிய உருவத்திலும் கூடுதல் எடையும் கொண்டதாக இருக்கும். இந்தத் தண்டாட்டியை பற்றி திண்டுக்கல்லை சேர்ந்த 96 வயது பாட்டி வேற லெவல் விளக்கம் கொடுத்துள்ளார்.

தண்டட்டி என்பது 1970களில் உள்ள பெண்கள் அணியும் காதணி வகைகளில் ஒன்று. இந்த தண்டட்டி இயல்பாக காதுகளில் அணியும் தோடுகள் போன்று இல்லாமல் தோடுகளை விட பெரிய உருவத்திலும் கூடுதல் எடையும் கொண்டதாக இருக்கும்.

இந்தக் கால பெண்கள், கால மாற்றத்தால் தண்டட்டி அணிவதில்லை. ஆனால் தென் மாவட்டங்களான திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட இடங்களில், இந்த மார்டன் உலகத்தில் நகரங்களில் வாழும் பெரும்பாலான பெண்கள் தண்டட்டி என்றால் என்ன என்றுகூட அறிந்திருக்க மாட்டார்கள்.

ALSO READ | புதுச்சேரியில் பாரம்பரிய பிரெஞ்சு உணவு விற்பனையகம் திறப்பு..! இங்கு இதுதான் ஸ்பெஷல்?

இந்த தண்டட்டி அணிவதற்கு காதுகளை ஏற்றார் போல் தனிப்பட்ட முறையில் வளர்க்க வேண்டும். சுமார் 50, 60 வருடங்களுக்கு முன்னர் தண்டட்டி அணிவதன் அவசியம், தண்டட்டி அணிவதற்கு காதுகளை எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்றும், தண்டட்டியின் சிறப்புகளை பற்றியும் திண்டுக்கல்லை சேர்ந்த 96 வயது அப்பத்தா (பாட்டி) வாஞ்சையோடு விளக்கம் கொடுத்துள்ளார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Dindigul, Local News