முகப்பு /செய்தி /திண்டுக்கல் / வெங்காயத்தில் முதலீடு செய்தால் 30 சதவீத லாபம்.. 2 கோடி மோசடி செய்த நபர் கைது

வெங்காயத்தில் முதலீடு செய்தால் 30 சதவீத லாபம்.. 2 கோடி மோசடி செய்த நபர் கைது

கைது செய்யப்பட்ட சூர்யா

கைது செய்யப்பட்ட சூர்யா

நாசிக்கில் இருந்து வெங்காயத்தை வாங்கி, அதிக விலை வரும் போது விற்பனை செய்வதாகவும், விருப்பம் உள்ளவர்கள் முதலீடு செய்தால் 30 சதவீதம் லாபம் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவைச் சேர்ந்த சூர்யா என்பவர், PRK இன்டர்நேஷனல் இம்போர்ட் & எக்ஸ்போர்ட் நிறுவனம் என்ற பெயரில், யூடியூப்பில் கணக்கு வைத்துள்ளார். இதில் வீடியோ வெளியிட்ட சூர்யா, மும்பை மற்றும் நாசிக்கில் இருந்து வெங்காயத்தை வாங்கி, அதிக விலை வரும் போது விற்பனை செய்வதாகவும், விருப்பம் உள்ளவர்கள் முதலீடு செய்தால் 30 சதவீதம் லாபம் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சந்திரசேகர் என்பவர் சூர்யாவின் வங்கிக் கணக்கில் 14 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். மேலும், திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 21 பேர் சூர்யாவிடம் 2 கோடியே 14 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர்.

குறிப்பிட்ட காலத்தில் பணம் திரும்ப கிடைக்காததால், அவர்கள் சூர்யாவை தொடர்பு கொண்டபோது, செல்போன் இணைப்பு ஸ்விட்ச் ஆப் செய்யப்படிருந்தது.

இது குறித்து, திண்டுக்கல் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வத்தலகுண்டுவில் தலைமறைவாக இருந்த சூர்யாவை கைது செய்தனர்.

செய்தியாளர் : சங்கர் (திண்டுக்கல்)

First published:

Tags: Crime News, Dindigal, Investment