முகப்பு /திண்டுக்கல் /

"ரூ. 2 லட்சம் வரை செலவு; ஆனால் ரூ.1 லட்சம் கூட வருமானம் இல்லை" வேதனையில் திண்டுக்கல் திராட்சை விவசாயிகள்!

"ரூ. 2 லட்சம் வரை செலவு; ஆனால் ரூ.1 லட்சம் கூட வருமானம் இல்லை" வேதனையில் திண்டுக்கல் திராட்சை விவசாயிகள்!

X
திண்டுக்கல்

திண்டுக்கல் விவசாயிகள்

Dindigul grapes farmers | திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் திராட்சை பழம் சாகுபடி செய்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மாவட்டம்கொடைரோடுசுங்கச்சாவடியைகடந்த உடன் நெடுஞ்சாலையில் இருபுறமும் 5க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 4000 ஏக்கர் அளவிலான நிலத்தில் திராட்சைபழம் சாகுபடி செய்து வருகின்றனர்.

இவ்வாறு சாகுபடி செய்யப்படும்திராட்சைபழங்கள் சிறுமலை அடிவாரப் பகுதியில் விளைவதால் மிகவும் சுவை மிக்கதாகவும், நீர்ச்சத்து அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் நெடுஞ்சாலையின் ஓரங்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள்திராட்சைபழங்களைபெட்டி பெட்டியாக அடுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும், திராட்சைப்பழம் விளைவிக்கப்பட்டு சுமார் 12 மாதங்கள் முதல் 18 மாதம் வரை உரங்கள் பூச்சி மருந்து உள்ளிட்டவை தெளித்துமுறையாகபராமரித்து வளர்க்கப்படுகின்றன. மேலும், திராட்சைக்கொடி முழுமையாக வளர்ந்து பிஞ்சு காய்க்கும்தருவாயில்கவாத்து வெட்டியபிறகு, நான்கு மாதத்தில்திராட்சைபழங்கள்விற்பனைக்குதயார் ஆகிவிடும்.

இவ்வாறு விளைவிக்கப்படும் திராட்சை பழங்கள் கொடைரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மட்டுமே ஒரு நாளைக்கு சுமார் 1,500 கிலோ முதல் ஏற்றுமதி செய்தும் போதிய வருவாய் இல்லை என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க | திண்டுக்கல் அருகே இப்படி ஒரு அருவியா? அட்டகாசமான புல்லாவெளி அருவியை சுற்றுலா தலமாக அறிவிக்க கோரிக்கை!

திராட்சைப்பழம் முழுமையாக விற்பனை செய்யும்அளவிற்குதயார் செய்யும் வரைஇதனைபராமரிக்கும் செலவு 2 லட்சம் வரை ஆகிறது எனவும், ஆனால் ஒருலட்சத்திற்கு கூட ஏற்றுமதி செய்ய முடியவில்லை எனவும் வேதனை தெரிவிக்கும் திராட்சை விவசாயி, விவசாயத்திற்குத் தேவையான பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் ஆகியவற்றை மானியத்தில் வழங்கினால் மட்டுமே விவசாயிகள் லாபம் பார்க்க முடியும், இல்லையென்றால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும்மந்தமடைந்துதான் போகும் என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Dindigul, Farmers, Local News