முகப்பு /திண்டுக்கல் /

திண்டுக்கல் +1, +2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு சொன்ன ஆட்சியர்!

திண்டுக்கல் +1, +2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு சொன்ன ஆட்சியர்!

மாதிரி படம்

மாதிரி படம்

Dindigul Collector announcement | திண்டுக்கல்லில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.

  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில்தங்கிபயிலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்புமாணவர்களுக்குத்தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து வழிகாட்டு ஆலோசனை முகாம்கள் 26.04.2023 அன்று திண்டுக்கல் மற்றும் 02.05.2023 அன்று நிலக்கோட்டை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது .

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் ஆதிதிராவிடர் இன மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை விகிதத்தினை உயர்த்தும் நோக்கத்தோடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில்தங்கிபயிலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்புமாணவர்களுக்குத்தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து வழிகாட்டு ஆலோசனை (Career Guidance) முகாம்கள் நடைபெறவுள்ளது.

Mass Movement for Transformation (MMT) and NURTURE என்ற தன்னார்வ இயக்கத்தின் துணையுடன் "வேர்களை விழுதுகளாக்குதல்" என்ற பெயரில் 26.04.2023 அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், 02.05.2023 அன்று நிலக்கோட்டை அரசு மகளிர்கலை கல்லூரியிலும் காலை 10.00 மணி முதல் 1.30 வரை நடைபெற உள்ளது.

இதையும் படிங்க | ஜில்லுனு வெதர்.. களைகட்ட தொடங்கிய கோடை சீசன் : கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

இந்த முகாம்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும்மாணவர்களுக்குதொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட உள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.விசாகன், தெரிவித்துள்ளார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Dindigul, Local News, School students