முகப்பு /திண்டுக்கல் /

சின்னாளப்பட்டி சுங்குடி சேலை எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?

சின்னாளப்பட்டி சுங்குடி சேலை எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?

X
சின்னாளப்பட்டி

சின்னாளப்பட்டி சுங்குடி சேலை

Chinnalapatti Sungudi Sarees | திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலானோர் சுங்குடி சேலை உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலானோர் சுங்குடி சேலை உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் சின்னாளப்பட்டி பகுதியில் அதிக அளவில் சுங்குடி சேலை தயாரிப்பதால் இதற்கு புவிசார் குறியீடும் பெற்றுள்ளது.

இங்கே தயாரிக்கும் சேலைகள் வெள்ளை நிற சேலைகளாக பல்வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு, சின்னாளப்பட்டியில் தங்கள் வீடுகளிலேயே சுங்குடி சேலை தயார் செய்வதற்கான உபகரணங்களை வைத்து உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த வெள்ளை நிற சேலைகளில் மெழுகை நன்கு காய்ச்சி நூற்றுக்கும் மேற்பட்ட வித விதமான கட்டையச்சுகளை பயன்படுத்தி பல்வேறு டிசைன்களை அச்சடித்து வருகின்றனர்.

பின்னர் மெழுகுச்சு வேலை முடிந்து, பல்வேறு டிசைன்களை கொண்ட வண்ண வண்ணமான அச்சுக்களை பதிக்கின்றனர். இவ்வாறு அச்சடிக்கப்படும் சுங்குடி சேலைகளில், அச்சு டிசைன்கள் வேலை முடிந்த பின்பு, ஜவ்வரிசியை கொண்டு நன்கு காய்ச்சிய கஞ்சியை சேலையில் முழுவதுமாக நனைத்து உலர காய வைக்கின்றனர்.

சின்னாளப்பட்டி சுங்குடி சேலை

இதையும் படிங்க : ஈரோடு மக்களின் மினி டூரிஸ்ட் ஸ்பாட்.. குளித்து குதூகளிக்க கொடிவேரி அணை!

இவ்வாறு காய வைத்த பிறகு, இஸ்திரி பெட்டியை கொண்டு சுருக்கம் இல்லாமல் தேய்த்து அழகாக மடிப்பு வருவதற்காக 20 சேலைகளை மொத்தமாக அடுக்கி வைத்து அதன் மீது சுமார் 30 கிலோ எடையுள்ள கற்களை வைத்து அழுத்தம் கொடுக்கின்றனர். இதன் பிறகு சின்னாளப்பட்டி பிரபலமான சுங்குடி சேலைகள் விற்பனைக்கு தயாராகிவிடுகிறது.

இவ்வாறு தயாரிக்கப்படும் சேலைகளின் விலையானது குறைந்தபட்சம் 350 ரூபாயிலிருந்து. அதிகபட்சம் 1600 ரூபாய் வரை விற்பனையாகி வருவதால் தங்களுக்கு போதிய வருவாய் கிடைப்பதாக இதனை தயாரிப்பவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் தயாரிக்கும் சேலை வகைகளில், கேட்டி சேலை பூனம் ஜரிகை கட்டம், எட்டுக்கு இரண்டு மயூரி வனஜா கட்டம், உள்ளிட்ட பல்வேறு வகைகளும் இடம்பெறுகின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதிலும் சுங்குடி சேலை என்றால் ஒரே சேலையில் சுமார் 10,000 மேற்பட்ட முடிச்சுகள் சிறிது சிறிதாக போடப்பட்டு தயார் செய்யப்படுவதாகும். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் இவ்வகை சேலைகளை உடுத்தும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால், தற்போது புது விதமாக சுங்குடி சேலையில் பல்வேறு டிசைன்களில் தயார் செய்யப்படுகிறது என்றும் கூறுகின்றனர் இதனை உற்பத்தி செய்பவர்கள்.

    First published:

    Tags: Dindigul, Local News