முகப்பு /திண்டுக்கல் /

சிறுமலையில் கிடைக்கும் சுவைமிக்க பலாப்பழம்.. சீசன் இல்லனாலும் திண்டுக்கல்லில் கிடைக்கும்..

சிறுமலையில் கிடைக்கும் சுவைமிக்க பலாப்பழம்.. சீசன் இல்லனாலும் திண்டுக்கல்லில் கிடைக்கும்..

X
பலாப்பழம்

பலாப்பழம்

Jackfruit : திண்டுக்கல் சிறுமலை பலாப்பழம் என்றாலே சிறப்புமிக்க தனிச்சுவையுடன் இருப்பதால், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இந்த பலாப்பழத்திற்கு சிறந்த வரவேற்பு உள்ளது. இதனால் சிறுமலை பிரிவில் பலாப்பழம் வியாபாரம் அமோமாக நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலையில் பல்வேறு வன விலங்குகள் மட்டுமின்றி ஏராளமான மூலிகை செடிகளும் இருக்கின்றன. மேலும் இங்கு சுவைமிக்க கனிகளும் விளைகின்றன.

சிறுமலை வனப்பகுதியில் வாழை, பலா, எலுமிச்சை மற்றும் பல்வேறு காய்-கனிகள் விளைவிக்கப்படுகிறது.

இங்கு விளையும் வாழை, பலா பழங்கள் திண்டுக்கல் கொண்டு வரப்பட்டு இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக திண்டுக்கல் சிறுமலை பலாப்பழம் என்றாலே சிறப்புமிக்க தனிச்சுவையுடன் இருப்பதால், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இந்த பலாப்பழத்திற்கு சிறந்த வரவேற்பு உள்ளது.  மேலும் , சிறுமலை பலாப்பழம் சித்திரை மாதத்தின் கடைசியில் தொடங்கி ஆடி மாதம் வரை வரத்து இருக்கும். தற்போது பங்குனி மாதம் என்பதால் சீசன் தொடங்காவிட்டாலும் தற்போதும் பலாப்பழம் ஓரளவு காய்க்க தொடங்கி உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சீசன் வரும் வரை காத்திருந்தால் பழங்கள் அனைத்தும் வீணாக நேரிடும் என்பதால் , அப்பகுதி பலாப்பழ வியாபாரிகள் பழங்களை சந்தைக்கு கொண்டு செல்லாமல் மலை அடிவாரத்திலேயே வைத்து விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் சிறுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் திண்டுக்கல் நத்தம் சாலை வழியாக சிறுமலை பிரிவை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் அதிகளவு நார்ச்சத்துள்ள இந்த பலாப்பழங்களை வாங்கி செல்கின்றனர்.

top videos
    First published:

    Tags: Dindigul, Local News