முகப்பு /திண்டுக்கல் /

திண்டுக்கல்லில் தவக்கால நிறைவையொட்டி கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஊர்வலம்

திண்டுக்கல்லில் தவக்கால நிறைவையொட்டி கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஊர்வலம்

குருத்தோலை ஞாயிறு

குருத்தோலை ஞாயிறு

Dindugal News| குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தென்னை மர குருத்தோலைகளை கைகளில் ஏந்தி ஒசானா பாடல் பாடியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.

  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல்லில் கிறிஸ்தவர்களின் தவக்கால நிறைவு ஞாயிறை முன்னிட்டு குறுத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடைபெற்றது.

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் ஓசன்னா துதி பாடிக் கொண்டு மேட்டுப்பட்டி வியாகுல அன்னை ஆலயம், மரிய நாதபுரம் வின் ஏர்ப்பு மாதா ஆலயம், குமரன் திருநகர் வேளாங்கண்ணி மாதா ஆலயம், மற்றும் முள்ளிப்பாடி பஞ்சம்பட்டி வெள்ளோடு உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் இருந்து குருத்தோலை ஏந்தி ஊர்வலமாகச் சென்று திருப்பலி நிறைவேற்றினர்.

இதனைத் தொடர்ந்து CSI கிறிஸ்தவ தேவாலயத்தில் ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் கூட்டு பிராத்தனை நடைபெற்றது. திண்டுக்கல்லில் பல்வேறு நகர்ப்புறங்களில் ஓசன்னா துதி பாடிக்கொண்டு தென்னை குறுத்தினை கையிலேந்தி R.S. ரோடு, சாலை ரோடு வழியாக சென்று தூய வளனார் தேவலாயத்தில் கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றினர்.

top videos
    First published:

    Tags: Dindigul