முகப்பு /திண்டுக்கல் /

பேப்பரால் செய்யப்பட்ட பேனா.. திண்டுக்கல்லில் பார்வையாளர்களை கவரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி!

பேப்பரால் செய்யப்பட்ட பேனா.. திண்டுக்கல்லில் பார்வையாளர்களை கவரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி!

X
முறையில்

முறையில் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களின் கண்காட்சி

Handicrafts Exhibition In Dindigul : திண்டுக்கல்லில் இயற்கை பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட விதவிதமான கைவினைப் பொருட்கள் அடங்கிய சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.

  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து நடத்தும் சூழலுக்கு உகந்த நெகிழி அல்லாமல் பொருட்களுக்கான கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.

நெகிழி பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் செய்யப்படும் பொருட்களை பயன்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திண்டுக்கல்லில் நடைபெறும் கண்காட்சியில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த கைவினைப் பொருட்கள், மற்றும் பல்வேறு நிறுவனங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

கைவினைப் பொருட்கள் கண்காட்சி

மேலும், இந்த கண்காட்சியில் பேப்பரால் செய்யப்பட்ட பேனாக்கள், வைக்கோலால் செய்யப்பட்ட தட்டு வகைகள், நெல் உமியை பயன்படுத்தி செய்யப்பட்ட தட்டு வகைகள், வாழை நாரை பயன்படுத்தி செய்யப்பட்ட கூடைகள், மற்றும் பல்வேறு அழகு சாதன பொருட்கள், ரொட்டியை பயன்படுத்தி செய்யப்பட்ட தண்ணீர் டம்ளர்கள், கொட்டாங்குச்சியில் செய்யப்பட்ட தேனீர் குடுவைகள், மற்றும் மெழுகு விளக்குகள், உள்ளிட்ட ஏராளமான இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த கண்காட்சியில் ஏராளமான பொதுமக்களும் கல்லூரி மாணவ-மாணவிகளும் கலந்துகொண்டு கண்காட்சிப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

    First published:

    Tags: Dindigul, Local News