முகப்பு /திண்டுக்கல் /

திண்டுக்கல் கோபால் நாயக்கர் மணி மண்டபத்தில் உள்ள வியப்பூட்டும் புகைப்படங்கள்.. யார் இவர் தெரியுமா?

திண்டுக்கல் கோபால் நாயக்கர் மணி மண்டபத்தில் உள்ள வியப்பூட்டும் புகைப்படங்கள்.. யார் இவர் தெரியுமா?

X
திண்டுக்கல்

திண்டுக்கல் கோபால் நாயக்கர் மணி மண்டபம்

Dindigul News : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சியில் விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கரின் மணிமண்டபம் உள்ளது. இந்த மணிமண்டபத்தை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர்.

  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கரின் மணிமண்டபம் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவர் கோபால் நாயக்கர். ஆங்கிலேயர்களை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற 18ம் நூற்றாண்டில் பெரும் படையை திரட்டி போரிட்ட மன்னர்களில் கோபால் நாயக்கர் குறிப்பிடத்தக்கவர். சில துரோகிகள் அவரை காட்டிக் கொடுத்ததால் திண்டுக்கல் நகரில் ஆங்கிலேயர்களால் தூக்கிட்டு கொல்லப்பட்டார். இவரைப் பற்றி நினைவூட்டும் வகையில் பழனி சாலையில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.

இந்த மணிமண்டபத்தை சுற்றிப் பார்க்க, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள், மாணவ, மாணவிகள் என பலரும் வந்து செல்கின்றனர். இந்த மணி மண்டபத்தின் சிறப்பம்சமாக விளங்குவது, இங்கு அமையப்பட்டுள்ள கோபால் நாயக்கரின் திருவுருவச் சிலை மற்றும் கோபால் நாயக்கரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் பழமையான ஓவியங்கள்.

இதையும் படிங்க : நாமக்கல் நகரில் கோடை வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு பழரசம்

விருப்பாச்சி ஊரில் கிழக்கு எல்லையில் தன் மனைவிக்காக கோபால் நாயக்கர் கட்டிக் கொடுத்த அரண்மனை சம்பந்தப்பட்ட பல்வேறு புகைப்படங்கள், மேலும் தற்போது அந்த அரண்மனை இல்லாவிட்டாலும், அவர் கட்டிய அந்த அரண்மனையில் இன்று வரை அசைக்க முடியாத யானை கட்டும் கல் மற்றும் குதிரைகள் தண்ணீர் குடிக்கும் கல் தொட்டி போன்றவை இருக்கின்றன.

மேலும்,அந்த அரண்மனையில் உள்ள சிலைகள், அரண்மனை தோட்டத்தில் இருக்கும் கன்னிமார் கோவில், ஆங்கிலேயர் காலத்தில் கோபால் நாயக்கர் அடைக்கப்பட்டிருந்த சிறை, மிக வலிமையாக கட்டப்பட்ட கோபால் நாயக்கர் அரண்மனையின் அடித்தளம், கோபால் நாயக்கர் கூட்டமைப்பில் இருந்த ஆயக்குடி பாளையக்காரர்கள் வெடிமருந்து தயாரித்த இடம் என சுமார் 70க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த மண்டபத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இவைகளை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். நீங்களும் குடும்பத்தோடு இங்கே ஒரு விசிட் அடிக்கலாம்.

    First published:

    Tags: Dindigul, Local News