முகப்பு /செய்தி /திண்டுக்கல் / முழு மதுவிலக்கை அமல்படுத்திய எமக்கலாபுரம் பஞ்சாயத்து நிர்வாகம் - நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!

முழு மதுவிலக்கை அமல்படுத்திய எமக்கலாபுரம் பஞ்சாயத்து நிர்வாகம் - நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!

ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்

ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே, முழு மதுவிலக்கை அமல்படுத்திய பஞ்சாயத்து நிர்வாகத்தால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள எமக்கலாபுரம் பஞ்சாயத்து தலைவராக சுரேஷ் செயல்பட்டு வருகிறார். இங்குள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில், மதுபானம் அருந்தியவர்களால் அண்மைக்காலமாக பிரச்னை இருந்துவந்தது. மேலும், மதுப் பழக்கத்திற்கு சிறுவர்களும் ஆளாகி வந்த நிலையில் மதுபானங்களை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனால் ஊராட்சி மன்றத்தலைவர் சுரேஷ், எமக்கலாபுரம் பகுதியில் மதுபானங்கள் விற்பதற்கு தடைவிதிக்கப்படுவதாக கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் போட்டு அதனை விளம்பரம் செய்துள்ளார்.

மேலும் ஊர் பஞ்சாயத்து அலுவலகத்தில் போட்ட தீர்மானத்தை மீறி விற்கப்பட்டால் அவர்களை ஊர் சார்பாகவே சட்ட ரீதியாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக எமக்கலாபுரம், பஞ்சாயத்திர்க்கு உட்பட்ட பகுதிகளில் முற்றிலும், மதுபானங்கள், தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ளது . இதனால் மதுபானங்கள் விற்பனை இல்லாததாலும். மதுபானங்கள், அருந்துபவர்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எமக்கலாபுரம் பஞ்சாயத்து போல, மற்ற கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டங்களில் பூரண மதுவிலக்கு தீர்மானம் போட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செய்தியாளர் : சங்கர் (திண்டுக்கல்)

First published:

Tags: Alcohol, Dindigal