முகப்பு /திண்டுக்கல் /

மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு.. திண்டுக்கல்லில் மினி மாரத்தான் போட்டி..

மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு.. திண்டுக்கல்லில் மினி மாரத்தான் போட்டி..

திண்டுக்கல்லில் மினி மாரத்தான் போட்டி

திண்டுக்கல்லில் மினி மாரத்தான் போட்டி

Dindugal News | திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ”மீண்டும் மஞ்சப் பை” பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகளை நடைபெற்றது.

  • Last Updated :
  • Dindigul, India

நெகிழியை ஒழிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் மீண்டும் மஞ்சப்பையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகள் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதனைகோட்டாட்சியர் பிரேம்குமார் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

இந்த மாரத்தான் திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி தலைமை தபால் நிலையம், பேருந்து நிலையம், காமராஜர் சிலை, பெரியார் சிலை, வெள்ளை விநாயகர் கோயில், வடக்கு ரதவீதி பழனி ரோடு, வழியாக சென்று அங்கிருந்து மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை ஐந்தரை கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. மினி மாரத்தான் போட்டியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் பரிசாக ரூபாய் 5000, 2ம் பரிசாக ரூபாய் 3000, 3ம் பரிசாக ரூபாய் 2000, ஆறுதல் பரிசாக 10 பேருக்கு ரூபாய் 500 வழங்கப்பட்டன. மேலும் மினி மாரத்தான் போட்டிக்கு முன்பு பள்ளி மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம் நடைபெற்றது.

    First published:

    Tags: Dindigul, Local News