முகப்பு /திண்டுக்கல் /

உலக செஞ்சிலுவை தினம் : திண்டுக்கல்லில் நடந்த முகாமில் 160 மாணவர்கள் ரத்ததானம்!

உலக செஞ்சிலுவை தினம் : திண்டுக்கல்லில் நடந்த முகாமில் 160 மாணவர்கள் ரத்ததானம்!

X
ரத்த

ரத்த தான முகாம்

World Red Cross Day 2023: திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் முக்கிய மருத்துவமனையாக இருந்து வருகிறது. இதில் ஏழை எளிய பொதுமக்கள் அதிக அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து பிரசவத்திற்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையை நாடி வருகின்றனர். அப்போது பிரசவத்திற்கு வந்த பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படும்போது ரத்தம் அதிக அளவில் தேவைப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மருத்துவமனையில் இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறையை போக்கும் வகையில், உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் இந்திய கட்டுநர் சங்கம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் திண்டுக்கல்லில் உள்ள யூத் ரெட் கிராஸ் மற்றும் முகிழம் அகாடமி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் 160 நபர்களிடமிருந்து பெற்றப்பட்ட ரத்தம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கியில் சேமிக்கப்பட்டது.

top videos

    முன்னதாக இந்த இரத்ததான முகாம் நிகழ்ச்சியை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் நாட்டாமை காஜா மைதீன் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தார்.

    First published:

    Tags: Dindigul, Local News