முகப்பு /திண்டுக்கல் /

எது திண்டுக்கல்ல ரூ.10 நாணயம் செல்லாதா? குமுறும் மக்கள்!

எது திண்டுக்கல்ல ரூ.10 நாணயம் செல்லாதா? குமுறும் மக்கள்!

X
பத்து

பத்து ரூபாய் நாணயம்

Dindigul rs.10 coin | திண்டுக்கல்லில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாத காசாக பார்க்கும் மனப்பாங்கு அதிகரித்துள்ளது.

  • Last Updated :
  • Dindigul, India

பத்து ரூபாய் நாணயங்களை கடந்த 2005 ஆண்டு இந்தியன் ரிசர்வ் வங்கி பல்வேறு டிசைன்களில் வெளியிட்டது. இதன் மூலம் 10 ரூபாய் நாணயங்கள் பொதுமக்கள் பல்வேறு விதமான பரிமாற்றங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது உறுதி செய்யப்பட்டது.

ஆனால், தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற குருட்டு நம்பிக்கை மக்களின் மனதில் பதிந்துள்ளது. இதனால் சில்லறை வியாபாரிகளான டீக்கடை உரிமையாளர்கள், மளிகை கடை உரிமையாளர்கள் , பொதுமக்கள் என அனைவரும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என வாங்க மறுத்து வருகின்றனர்.

இதனால் பத்து ரூபாய் நாணயம் என்றாலே பொதுமக்கள் மத்தியில் மதிப்பில்லாத பொருளாகவே நினைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த பத்து ரூபாய் நாணயம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி சார்பாகவும், அரசாங்கம் சார்பாகவும் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இன்னும் பொதுமக்கள் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும் என நம்பாத சூழ்நிலையை இருந்து வருகிறது.

எனவே இந்த பத்து ரூபாய் நாணயங்கள் அனைத்து இடங்களிலும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்றும், பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒவ்வொரு கடை உரிமையாளரும் தங்களது கடை முன்பு நோட்டீஸ் பலகைகளை வைத்தால் மட்டுமே பொதுமக்கள் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்கிற குருட்டு நம்பிக்கையில் இருந்து வெளிவருவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Dindigul, Local News