முகப்பு /செய்தி /தர்மபுரி / ”இவர் திமுக ஆட்சிக்கு கெட்ட பெயரை வாங்கி தருவார் வாங்கி தருகிறார்” அன்புமணி ராமதாஸ்

”இவர் திமுக ஆட்சிக்கு கெட்ட பெயரை வாங்கி தருவார் வாங்கி தருகிறார்” அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

PMK Anbumani Ramadoss : தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு என்று சொன்னார்கள். இதுவரை எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளது. வருவாய் குறைவாக இல்லாத கடைகளை மூடுகிறார்கள். தமிழக மக்கள் மீதும், பெண்கள் மீது அக்கரையிருந்தால், மது விலக்கு கொண்டு வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Dharmapuri, India

தருமபுரியில் அதியமான் கிரிக்கெட் கிளப் நடத்தும்  ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில்  இன்று முதல் ஜூன் 4 வரை நடைபெறுகிறது. இந்த போட்டியினை  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காலத்திற்கு பிறகு இளைஞர்கள் கஞ்சா, மது என திசை மாறி போய்விட்டார்கள் என தெரிவித்தார்.

இந்த ஆண்டு அரசு தேர்வுகளில், கடைசியில் உள்ள 15 மாவட்டங்கள் வட மாவட்டங்கள் தான். இந்த பகுதியில் தான் டாஸ்மாக் விற்பனை அதிகமாக இருந்து வருகிறது. இந்த மாவட்ட மக்களுக்கு என்ன திட்டங்களை அரசு கொடுத்துள்ளது. இது என்ன திராவிட மாடல் அரசு?

மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அரசு மது விற்பனை செய்யாவிட்டால், கள்ளச்சாராயம் பெருகும் என அரசு மதுக்கடைகளை திறந்துள்ளது. ஆனால் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. இது ஆட்சியாளர்கள், காவல் துறையினர், அரசியல் வாதிகள் எல்லோருக்குமே தெரிந்து தான் நடைபெறுகிறது.

இப்போது உள்ள மதுவிலக்கு துறை அமைச்சர், மக்கள் மீது மதுவை திணித்து வருகிறார். இவர் திமுக ஆட்சிக்கு கெட்ட பெயரை வாங்கி தருவார். வாங்கி தருகிறார். கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் தான் இறந்துள்ளனர். ஆனால் அரசு விற்பனை செய்யும் சாராயம் குடித்து பல பேர் உயிரிழந்துள்ளனர்‌. தமிழ்நாட்டில் மது விற்பனையை கொண்டு வந்தது அதிமுக தான். தற்பொழுது 25 வயது இளைஞர்கள் மது இல்லாமல் இருக்கமுடியாது என்றாகிவிட்டது. நாங்கள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று கேட்கிறோம். ஆனால் இங்கு எங்கும் மது, எதிலும் மது என்று தான் உள்ளது. இதுதான் திராவிட மாடல் அரசு?  என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: தஞ்சாவூரில் மது அருந்தி 2 பேர் பலி: மதுவில் சயனைடு: தற்கொலையா? கொலையா? வெளியான அதிர்ச்சி தகவல்

 தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு என்று சொன்னார்கள். இதுவரை எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளது. வருவாய் குறைவாக இல்லாத கடைகளை மூடுகிறார்கள். தமிழக மக்கள் மீதும், பெண்கள் மீது அக்கரையிருந்தால், மது விலக்கு கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் அதிகப்படியாக தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் வன்னியர் சமூக மக்கள் அதிகமாக உள்ளனர். இதில் பட்டியல் சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் அது போதாது. வன்னியர் சமூக மக்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக கொண்டு வந்து சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

top videos

    செய்தியாளர்- சுகுமார் ரங்கநாதன்

    First published:

    Tags: Dharmapuri, Pmk anbumani ramadoss