முகப்பு /செய்தி /தர்மபுரி / வாட்டர் கேன்களை மரத்தில் கட்டி பறவைகளுக்கு உணவு, தண்ணீர்.. தருமபுரி மாணவர்கள் அசத்தல்!

வாட்டர் கேன்களை மரத்தில் கட்டி பறவைகளுக்கு உணவு, தண்ணீர்.. தருமபுரி மாணவர்கள் அசத்தல்!

பறவைகளுக்கு உணவு தண்ணீர்

பறவைகளுக்கு உணவு தண்ணீர்

Dharmapuri District News | கோடை காலத்தில் பறவைகளுக்கு ஏற்படும் உணவு தட்டுப்பாட்டை போக்க மாணவர்கள் பீனிக்ஸ் என்ற குழுவை அமைத்து இந்த செயலை செய்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Dharmapuri, India

தருமபுரி அருகே மாணவர்கள் 2வது ஆண்டாக கோடை காலத்தில் பறவைகளுக்கு ஏற்பட்டுள்ள உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வாட்டர் கேன்களை 100க்கும் மேற்பட்ட மரங்களில் கட்டி, உணவு மற்றும் தண்ணீர் வைத்துள்ளதால் ஏராளமான பறவைகள் உணவு தேடி வருகின்றன.

தருமபுரி மாவட்டம் பாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்ற இளைஞர் சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த அரசு பள்ளி மாணவர்களை ஒன்றிணைத்து பீனிக்ஸ் என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த பீனிக்ஸ் அமைப்பின் மூலம் பூகானஹள்ளி கிராமத்தில் உள்ள ஏரி, அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மருத்துமனை உள்ளிட்ட இடங்களில், பிறந்தநாள், கல்யாண நாள், தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் என கடந்த 4 ஆண்டுகளாக சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நட்டு வைத்து பராமரித்து வருகின்றனர். இந்த குழுவை சேர்ந்த அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் மரக்கன்றுகளை பராமரிப்பது, தண்ணீர் ஊற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பீனிக்ஸ் குழுவினர் 4 ஆண்டுகளுக்கு பல்வேறு இடங்களில் வைத்த மரக்கன்றுகள்  தற்போது ஓரளவுக்கு மரங்களாக வளர்ந்து நிற்கிறது. இந்த பூகானஹள்ளி ஏரியில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகளில் புங்கன் அத்தி, நாவல், பலா, வேம்பு அரசம்,  போன்ற பல வகை மரங்களும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வகையான பறவைகள் காலை, மாலை வேளைகளில் இந்த மரங்களில் வந்து அமர்ந்து  உண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகின்ற சூழல் இருந்து வருகிறது. இதனால் இந்த பீனிக்ஸ் அமைப்பினர், இங்கு வரும் பறவைகளின் உணவு மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என எண்ணினர். கடந்தாண்டு முதல் பறவைகளுக்கு உணவு தண்ணீர் தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தனர்.

இந்த ஆண்டும் அதேபோல், அன்றாடம் நாம் பயன்படுத்துகின்ற மக்காத பிளாஸ்டிக் வகையைச் சேர்ந்த வாட்டர் பாட்டில்களை எடுத்து, அதனை இரண்டாக வெட்டி, துளையிட்டு கம்பியின் மூலம் மரத்தில் கட்டி வருகின்றனர். இதில் மேல் பகுதியில் தானியங்கள் வைத்தும், கீழ் பகுதியில் தண்ணீரையும் ஊற்றி வருகின்றனர்.

இதனால் இந்த பகுதிக்கு வருகின்ற பறவைகள் மரத்தில் அமரும் போது, இங்கே கட்டி வைக்கப்பட்டுள்ள தானியங்களை உணவாக எடுத்துக் கொண்டு, தண்ணீரையும் குடித்து விட்டுச் செல்கின்றது. தொடர்ந்து தினமும் மரக்கன்றுகளை பராமரித்து வரும் ஃபீனிக்ஸ் குழுவினர், பறவைகளுக்கு வைக்கப்பட்டுள்ள உணவு மற்றும் தண்ணீர் குறைவாக இருந்தால், அதனை மீண்டும் நிரப்பி விட்டு செல்கின்றனர். கோடை காலத்தில் மனிதர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்  நிலை இருப்பதால், பறவைகள் உணவு மற்றும் தண்ணீருக்கு எங்கே செல்லும் என்ற நல்லெண்ணத்தில் இந்த பீனிக்ஸ் குழுவினர் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீரை வைத்து வருகின்றனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் மேலும் பல்வேறு வகையான புதிய பறவை இனங்கள் தற்போது இந்த பகுதியில் வருவது மனதிற்கு ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

top videos

    செய்தியாளர்: ஆர்.சுகுமார், தருமபுரி.

    First published:

    Tags: Birds, Dharmapuri, Local News, Summer, Water