முகப்பு /செய்தி /தர்மபுரி / சத்து மாத்திரைகள் சாப்பிட்டு மயக்கமடைந்த மாணவிகள்... நீலகிரியை தொடர்ந்து தருமபுரியில் அதிர்ச்சி!

சத்து மாத்திரைகள் சாப்பிட்டு மயக்கமடைந்த மாணவிகள்... நீலகிரியை தொடர்ந்து தருமபுரியில் அதிர்ச்சி!

தர்மபுரியில் பள்ளி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

தர்மபுரியில் பள்ளி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

Vitamin tablet | நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் அதிக சத்து மாத்திரைகளை உட்கொண்ட மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது தர்மபுரியில் இது போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Dharmapuri, India

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவிகள் வாந்தி மயக்கமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ.பள்ளிப்பட்டியில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 94 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆறாம் வகுப்பில் மட்டும் 2 மாணவர்கள் உள்பட 15 பேர் படிக்கின்றனர்.

இன்று பிற்பகல் மதிய உணவு இடைவேளையில் ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவிகள், ஆசிரியரின் மேசையில் வைத்திருந்த சத்து மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டுள்ளனர். இதில் அ.பள்ளிபட்டி பகுதியை சேர்ந்த 5 மாணவிகள் பிற்பகல் 2.30 மணியளவில் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், உடனடியாக மயக்கமடைந்த மாணவிகளை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஏ.பள்ளிபட்டி சப் இன்ஸ்பெக்டர் மதியழகன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மாணவிகள் சத்து மாத்திரை சாப்பிட்டு மயக்கமடைந்த தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் உறவினர்கள் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர்: ஆர்.சுகுமார், தருமபுரி.

First published:

Tags: Crime News, Dharmapuri, Local News