முகப்பு /செய்தி /தர்மபுரி / ஆணுறுப்பு துண்டிப்பு... தருமபுரியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்... போலீசார் விசாரணை..!

ஆணுறுப்பு துண்டிப்பு... தருமபுரியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்... போலீசார் விசாரணை..!

சடலம் கிடந்த இடத்தில் ஆய்வு செய்த காவல்துறையினர்

சடலம் கிடந்த இடத்தில் ஆய்வு செய்த காவல்துறையினர்

Dharmapuri | இறந்தது யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர், கொலை செய்யப்பட்டதன் காரணம் என்ன காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

  • Last Updated :
  • Dharmapuri, India

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே சந்தப்பேட்டை வனப்பகுதியில் தலை நசுக்கப்பட்டு, பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் சுமார் 40 முதல் 45  வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. வனப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற நபர் இதனை கண்டதும் ஏரியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பெயரில் ஆண் சடலம் இருந்த இடத்திற்கு வந்த ஏரியூர் காவல் ஆய்வாளர் யுவராஜ்   மற்றும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், பென்னாகரம் காவல்துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் ஆகியோர்கள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இறந்தது யார் எந்த பகுதியைச் சார்ந்தவர் கொலை செய்யப்பட்டதன் காரணம் என்ன என்ற கோணத்தில்  ஏரியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: ஆர்.சுகுமார்

top videos
    First published:

    Tags: Crime News, Dharmapuri, Local News