தருமபுரியில் தாயைப் பிரிந்து கிணற்றில் தவறி விழுந்து காயமடைந்த குட்டி யானை, பொம்மன் - பெள்ளி தம்பதியால் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உயிரிழந்தது.
தருமபுரியில் தாயை பிரிந்து கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை பொம்மன் மாவூத் மூலம் மீட்டு கடந்த 16ஆம் தேதியன்று முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாம் கொண்டு வரப்பட்டு பராமரிக்கபட்டு வந்தது. உதவி வன கால்நடை மருத்துவர் மரு. ராஜேஷ் குமார் ஆலோசனையின் படி குட்டி யானைக்கு திரவ உணவுகள் வழங்கப்பட்டு பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி மூலம் தினசரி கண்காணிக்கபட்டு வந்தது.
பொதுவாக யானை குட்டிகளுக்கு மனிதர்கள் உட்கொள்ளும் லேக்டோஜன் பால்பவுடரை தான் உணவாக அளிக்கிறோம்.
இந்த லேக்டோஜினை செரிப்பதற்கான என்சைம் யானைகளில் சுரப்பது மிகவும் குறைவு. முக்கியமாக அம்மாக்களினால் கைவிடப்பட்ட இந்த மாதிரி குட்டிகளுக்கு இந்த என்சைம்கள் சுரப்பது மிக மிக குறைவு.
எனவே லேக்டோஜன் செரிமானம் ஆகாமல் சிறிது சிறிதாக உடலில் சேகரம் ஆகும். இந்த மாதிரி லேக்டோஜன் சேகரம் ஆவது திடீரென்று ஏற்படும் டயரியா மூலம் தான் நமக்கு தெரிய வரும். அப்போதுதான் டையரியா தொடர்சியாக இருக்கும். அதற்கு முன்னால் இதனுடைய அறிகுறி வெளியே தெரியாது. ஆனால் குட்டி ஆக்டிவாகத் இருக்கும். நன்றாக விளையாடும். இந்த குட்டியும் இதே போல் தான் இருந்தது.
இந்த லாக்டோஜன் செரிமானம் ஆகாமல் வயிற்றில் ஒன்றுசேர்ந்து ரத்தத்தில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி அதனால் திடீரென்று டயரியவாக போகும். அவ்வாறு தான் இந்த குட்டிக்கும் திடீரென்று நேற்று மதியம் டயரியா ஏற்பட்டிருக்கிறது என்று மருத்துவர்கள் கலைவாணன், ஸ்ரீதர் மற்றும் ராஜேஷ் ஆகியோர்கள் தெரிவித்தார்கள்.
அவர்களின் அறிவுரை படி மருந்துகள் குளுகோஸ் மூலம் கொடுக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி யானை குட்டி இரவு 1 மணி அளவில் இறந்து விட்டது. ஒவ்வாமை காரணமாக வயிற்றுபோக்கு ஏற்பட்டு இறந்திருக்க கூடும், ஆனால் உடற்கூறு ஆய்வுக்கு பின்னர்தான் முழுமையான காரணம் தெரிய வரும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Death, Dharmapuri, Elephant, Elephant and calf, Local News