முகப்பு /செய்தி /தர்மபுரி / பென்னாகரம் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலி ; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பென்னாகரம் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலி ; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பட்டாசு விபத்து ஏற்பட்ட இடம்

பட்டாசு விபத்து ஏற்பட்ட இடம்

Dharmapuri Fire Accident | பென்னாகரம் அருகே நாகராசம்பட்டியில் சரவணன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் பட்டாசு தயாரிக்கும்போது எதிர்பாராத விதமாகத் தீவிபத்து ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Dharmapuri, India

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூதாட்டிகள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பென்னாகரம் அருகே நாகராசம்பட்டியில் சரவணன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் பட்டாசு தயாரிக்கும்போது எதிர்பாராத விதமாகத் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது குடோனில் இருந்த பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின. இதில் குடோனில் பணியாற்றி வந்த பழனியம்மாள் மற்றும் முனியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த சிவசக்தி என்ற பெண் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து பென்னாகரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் ரூபாய் நிவராணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

First published:

Tags: Dharmapuri, Local News