கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து மாமனார், மாமியார் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவனை கொலை செய்த பெண்ணை, ஒன்றரை ஆண்டுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலத்தை அடுத்த இலங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவரது மனைவி கீதா ஹரிஹரன் என்பவருடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்துள்ளார்.
இது மாமியார் கொளஞ்சி, மாமனார் சுப்பிரமணியத்திற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு இருவரையும் முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து கீதா கொலை செய்துள்ளார். அப்போது அந்த விஷ சாம்பாரை தெரியாமல் வாங்கி சாப்பிட்ட பக்கத்து வீட்டுச் சிறுவன் நித்தீஸ்வரனும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மங்கலம்பேட்டை காவல் நிலையப் போலீசார் பின்னர் விசாரணையை தீவிரப்படுத்தாமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் வந்தபோது அவரிடம் வழங்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து மீண்டும் வழக்கு விசாரணை சூடுபிடித்தது.
மேலும் படிக்க... Gold Rate Today | அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?
அப்போது ஹரிஹரன் உடன் இணைந்து கீதா இந்தக் கொலைகளை செய்தது அம்பலமானது. இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Cuddalore, Murder