முகப்பு /செய்தி /கடலூர் / காதல் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம்... தாலிகட்டும் நேரத்தில் தடுத்து நிறுத்திய மனைவி...!

காதல் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம்... தாலிகட்டும் நேரத்தில் தடுத்து நிறுத்திய மனைவி...!

காதல் திருமணம் செய்த கணவர் மற்றும் புகார் கொடுத்த மனைவி

காதல் திருமணம் செய்த கணவர் மற்றும் புகார் கொடுத்த மனைவி

தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருந்த நிலையில், மனைவி சரியான நேரத்தில் தடுத்து நிறுத்தினார்.

  • Last Updated :
  • Cuddalore, India

கடலூர் மாவட்டம் மயிலாடுதுறையில் காதல் கணவர், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருந்த நிலையில், தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை, மனைவி தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் 30 வயதான ராம்குமார். திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சபிதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாகக் கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக வாழ்ந்தனர்.

இதனிடையே சபிதாவுக்கு தெரியாமல், மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ராம்குமார் மோசடியாக விவகாரத்து பெற்றதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து திருவெண்காடு கோயிலில் ராம்குமார் தன்னுடன் பணியாற்றும் சக பெண் காவலரை, உறவினர்களின் முன்னிலையில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். இதுபற்றி தகவலறிந்த சபிதா, தனது குடும்பத்தினருடன் கோயிலுக்குச் சென்று திருமணத்தைத் தடுத்து நிறுத்தினார்.

Also Read : தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம்!.. போர்வையை கயிறாக கட்டி ஜன்னல் வழியே எஸ்கேப்

top videos

    பெண் காவலருடன் அங்கிருந்து ஓடிய, காவலர் ராம்குமார் திருவெண்காடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். சம்பந்தப்பட்ட இருவரும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கச் சொல்லி திருவெண்காடு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர். தனது கணவர் மோசடியாக விவகாரத்து பெற்று வேறொரு திருமணம் செய்ய முயன்றதாக சபிதா மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.

    First published:

    Tags: Crime News, Cuddalore, Marriage