முகப்பு /செய்தி /கடலூர் / “என்னா வெயிலு.. வாளி தண்ணீரில் குளித்துக்கொண்டே டூவிலரில் சுற்றும் இளைஞர்கள்” - வைரலாகும் வீடியோ

“என்னா வெயிலு.. வாளி தண்ணீரில் குளித்துக்கொண்டே டூவிலரில் சுற்றும் இளைஞர்கள்” - வைரலாகும் வீடியோ

நெய்வேலி வைரல் வீடியோ

நெய்வேலி வைரல் வீடியோ

கோடை வெயில் வாட்டும் வேளையில் அத்தியாவசிய தேவைக்கே வீட்டை விட்டு வெளியேற மக்கள் அஞ்சுகின்றனர்.

  • Last Updated :
  • Neyveli, India

அக்னி நட்சத்திரம் மக்களை வாட்டி வதிக்கும் நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த சிறுவர்கள் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் குளித்தபடி செல்லும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து, இயல்பை விடவும் வெப்பம் அதிகமாக உள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயிலை சமாளிக்க மக்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

கோடை வெயில் வாட்டும் வேளையில் அத்தியாவசிய தேவைக்கே வீட்டை விட்டு வெளியேற மக்கள் அஞ்சுகின்றனர்.இந்நிலையில் நெய்வேலியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கொளுத்தும் வெயிலை சமாளிக்க இருசக்கர வாகனத்தில் செல்லும் போது வாலியில் தண்ணீர் வைத்து குளித்துக்கொண்டே செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

top videos

    அந்த வீடியோவில்..” என்னா வெயிலு... நீங்களும் இந்த மாதிரி தண்ணீரில் குளித்துவிட்டு. வீட்டிலே உட்கார்ந்திருங்கள. என்னா வெயிலு. தண்ணீரை நிறைய குடிங்க” என  அட்வைஸ் வேறு செய்கிறார்கள். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    First published:

    Tags: Heat Wave, Viral Videos, Weather News in Tamil