அரபிக் கடலில் புயல் உருவாகியுள்ள காரணமாக தமிழக வங்கக் கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் எனவும் கடல் காற்றானது மணிக்கு 55 கி.மீ முதல் 65 கி.மீ வேகத்தில் வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆகவே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாழங்குடா, தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சொத்திகுப்பம் உள்ளிட்ட 49 மீனவ கிராமத்தைச் சேர்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் இன்று பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல கூடாதென கடலூர் மாவட்ட மீன்வளதுறை அதிகாரிகள் மீனவ கிராமங்களில் அறிவித்துள்ளனர்.
மேலும் படிக்க... மேலும் படிக்க... டெல்லி அரசு நிகழ்ச்சியில் 'மோடி' கோஷம் எழுப்பிய பாஜகவினர் - அப்செட்டான கெஜ்ரிவால்...
இந்த நிலையில் கடலூரில் கடல் சீற்றம் சற்று கொந்தளிப்பு காணப்படும் நிலையில் ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக கடலூர் துறைமுகம் மற்றும் கடலோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: பிரேம் ஆனந்த், கடலூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cuddalore, Fisherman, Meteorology department, Weather News in Tamil