முகப்பு /செய்தி /கடலூர் / வாகன ஓட்டிகளே... ஹெல்மெட் இல்லையா பெட்ரோல் கிடையாது... எதற்காக தெரியுமா?

வாகன ஓட்டிகளே... ஹெல்மெட் இல்லையா பெட்ரோல் கிடையாது... எதற்காக தெரியுமா?

No helmet no petrol | சாலை விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

No helmet no petrol | சாலை விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

No helmet no petrol | சாலை விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Cuddalore, India

கடலூரில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் தலைக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடலூர் வட்டாட்சியர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் பெட்ரோல் பங்குகளில் இருசக்கர வாகனங்களில் வருவோர் ஹெல்மெட் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அவர்களுக்கு பெட்ரோல் நிரப்ப கூடாது எனவும் கூறியுள்ளார்.

மேலும், ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் நிரப்பப்படும் என்பதை குறிக்கும் வகையில் அங்கு "நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்" என்ற வாசகம் அடங்கிய விழிப்புணர்வு பதாகையை வைக்கவும் அறிவுறுத்தியுள்ளார். சாலை விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Cuddalore, Helmet, Local News, Petrol