முகப்பு /செய்தி /கடலூர் / என்எல்சி விவகாரம்... கையெழுத்து கேட்ட திமுக கவுன்சிலரை சிறைபிடித்த பொதுமக்கள்..!

என்எல்சி விவகாரம்... கையெழுத்து கேட்ட திமுக கவுன்சிலரை சிறைபிடித்த பொதுமக்கள்..!

திமுக கவுன்சிலர் சிறைபிடிப்பு

திமுக கவுன்சிலர் சிறைபிடிப்பு

NLC Protest | வருவாய்த்துறை அதிகாரிகளின் வேலையை திமுக கவுன்சிலர் செய்வது ஏன் எனக் கேட்டு கிராம மக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Cuddalore, India

என்எல்சி நிறுவன நில எடுப்புக்கு ஆதரவாக கையெழுத்து கேட்டதாக திமுக கவுன்சிலர் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவன விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வளையமாதேவியைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் செல்வம், கரிவெட்டி கிராமத்தில் வீடு, வீடாக சென்று, என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுக்க தயார் என அச்சிடப்பட்ட காகிதத்தில் கையெழுத்து கேட்டதாக கூறப்படுகிறது.

' isDesktop="true" id="969543" youtubeid="5sFDHZaZNQE" category="cuddalore">

இதையும் படிங்க: உருவாகும் புதிய புயல்.? தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை லேட்டஸ்ட் அப்டேட்!

 இதனால் வெகுண்டெழுந்த அப்பகுதி மக்கள் திமுக கவுன்சிலரை சிறைபிடித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகளின் வேலையை திமுக கவுன்சிலர் செய்வது ஏன் எனக் கேட்டு கிராம மக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர்: பிரேம்

First published:

Tags: Cuddalore, Neyveli, NLC