முகப்பு /செய்தி /கடலூர் / என்எல்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி வாய்ப்பு இல்லையா? என்எல்சி தலைவர் விளக்கம்..!

என்எல்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி வாய்ப்பு இல்லையா? என்எல்சி தலைவர் விளக்கம்..!

என்.எல்.சி நிறுவன தலைவர் பிரசன்னகுமார்

என்.எல்.சி நிறுவன தலைவர் பிரசன்னகுமார்

என்எல்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்பது தவறு என அந்நிறுவன தலைவர் பிரசன்னகுமார் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Cuddalore, India

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த என்எல்சி தலைவர் பிரசன்னகுமார், நிலக்கரி பற்றாக்குறையால் என்எல்சி 5 அலகுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால், 1000 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிக்கு உடனடியாக 80 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது எனவும், என்எல்சியில் புதிதாக 1,800 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட இருப்பதாகவும், இது முழுவதும் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படும் எனவும் கூறிய அவர், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்பது உண்மை அல்ல என விளக்கமளித்தார்.

பொதுத் துறை நிறுவனங்கள் பலவற்றில் மத்திய அரசு 51 சதவீத பங்குகளை மட்டும் வைத்துள்ள நிலையில், என்எல்சியில் 79 சதவீத பங்குகளை வைத்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால், என்எல்சி-யை தனியாரிடம் வழங்க வாய்ப்பில்லை என குறிப்பிட்டார்.

மக்கள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு மக்களை பலர் திசை திருப்புகிறார்கள் என்றும் தவறான புரிதல் காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: Cuddalore, NLC, Tamil Nadu, Tamil News