முகப்பு /செய்தி /கடலூர் / நிலத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு... நிரந்தர வேலைவாய்ப்பு... என்.எல்.சி அளித்த விளக்கம்!

நிலத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு... நிரந்தர வேலைவாய்ப்பு... என்.எல்.சி அளித்த விளக்கம்!

மாதிரி படம்

மாதிரி படம்

NLC | நாட்டில் அதிகப்படியான இழப்பீடு கொடுக்கும் முதல் பொதுத்துறை நிறுவனம் என்எல்சி என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

என்.எல்.சி விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தவும், இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சுரங்கத் திட்டமிடல் துறை வழிகாட்டுதலின்படி, தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாக என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிலக்கரி வெட்டுவதற்குத் தேவையான கையகப்படுத்திய நிலங்கள் கையிருப்பில் இல்லை என்றும், இதனால் பழுப்பு நிலக்கரி உற்பத்தி, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மின்சாரம் தொடர்ந்து உற்பத்தி செய்ய அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேவையான ஆயிரத்து 54 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது என்றும், நில எடுப்பால் பாதிக்கப்படும் நபர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.

top videos

    ஏக்கர் ஒன்றுக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படுவதாகவும், நாட்டில் அதிகப்படியான இழப்பீடு கொடுக்கும் முதல் பொதுத்துறை நிறுவனம் என்எல்சி என்றும் விளக்கம் அளித்துள்ளது. நில உரிமையாளர்களுக்கும், கடலூர் மாவட்ட மக்களுக்கும் இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்றும் என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: Electricity, NLC