முகப்பு /செய்தி /கடலூர் / மின்கம்பத்துடன் கட்டப்பட்ட கால்வாய்... நியூஸ் 18 செய்தி எதிரொலியால் 24 மணி நேரத்தில் மாற்றியமைக்க உத்தரவிட்ட ஆட்சியர்

மின்கம்பத்துடன் கட்டப்பட்ட கால்வாய்... நியூஸ் 18 செய்தி எதிரொலியால் 24 மணி நேரத்தில் மாற்றியமைக்க உத்தரவிட்ட ஆட்சியர்

கடலூர்

கடலூர்

கடலூரில் நியூஸ்18 எதிரொலியால் 24 மணி நேரத்தில் கால்வாயில் இருந்த மின்கம்பம் மாற்றியமைக்கப்பட்டது.

  • Last Updated :
  • Cuddalore, India

கடலூர் மாவட்டம் கல்லூர் கிராமத்தில் கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கும் போது நடுவில் இருந்த மின்சார கம்பத்தோடு சேர்த்துக் கட்டப்பட்டதை குறித்து நியூஸ்18 செய்தி வெளியிட்டதையடுத்து ஆட்சியர் உத்தரவின் பெயரில் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்டப்பட்ட மங்களூர் ஒன்றியத்தில் உள்ளது கல்லூர் கிராமம். பொதுமக்களின் வசதிக்காக கல்லூர் ஊராட்சி சார்பில் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ரோட்டில் இருந்த மின்சார கம்பத்தை அகற்றாமல் கழிவுநீர் கால்வாயோடு சேர்ந்து கட்டியுள்ளனர். இதுகுறித்து நேற்று காலை நியூஸ் 18 செய்தி வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து, மின்சார கம்பத்தை அகற்றிவிட்டுக் கழிவு நீர் கால்வாய் அமைக்கக் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் திட்டக்குடி அடுத்த கல்லூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

Also Read : காதலியை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம்.. மணக்கோலத்தில் கைதான மாப்பிள்ளை..!

அதனைத்தொடர்ந்து, 24 மணி நேரத்தில் பணிகள் முடிவடைந்து மின்கம்பம் மாற்றியமைக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்த ஆட்சியருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

top videos
    First published:

    Tags: Cuddalore