முகப்பு /செய்தி /கடலூர் / பலாப்பழத்தில் இத்தனை வகைகள் உள்ளதா? - பண்ருட்டியில் களைகட்டிய பலாப்பழ திருவிழா..

பலாப்பழத்தில் இத்தனை வகைகள் உள்ளதா? - பண்ருட்டியில் களைகட்டிய பலாப்பழ திருவிழா..

பண்ருட்டியில் களைகட்டிய பலாப்பழ திருவிழா

பண்ருட்டியில் களைகட்டிய பலாப்பழ திருவிழா

Jackfruit Festival : கடலூர் மாவட்டம் பண்ருட்டி பலாத்தோப்பில் பலா திருவிழா நடந்தது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Cuddalore, India

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பலாப்பழ திருவிழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பத்திரக்கோட்டை கிராமத்தில் உள்ள பலா தோப்பில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மாபெரும் பலா திருவிழா நடைபெற்றது. விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவும் '100 வகை பலா, 100 விதமான சுவை' என்ற தலைப்பில், பலாவை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தும் நோக்கத்தில் விழிப்புணர்வு விழாவாக நடத்தப்பட்டது.

இந்த பலா திருவிழாவில் பண்ருட்டி மற்றும் கோவை, ராணிபேட்டை மற்றும் வெளிநாட்டு பலா என 100 வகை பலாவை விவசாயிகள் கண்காட்சியக மக்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். குறிப்பாக பண்ருட்டி பலா, ஆயிரம் காட்சி பலா, மிருது பலா, தேன் மஞ்சள் பலா, தாய்லாந்து ஆரஞ்ச் பலா, சிவப்பு பலா என பலவகை பலா கண்காட்சியில் இடம்பெற்றன.

இதையும் படிங்க : புதிய நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழ்... தமிழக மக்களுக்கு கிடைத்த பெருமை - வானதி சீனிவாசன் பெருமிதம்

இதனை சென்னை, சேலம், கோவை, ஈரோடு, தேனி, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் மக்கள் பலர் கலந்துகொண்டு ஒரே இடத்தில் வைக்கப்பட்ட பலா கண்காட்சியை பார்வையிட்டனர்.

மேலும் இதில், ஏராளமான பெண்கள், பலாப்பழத்தை கொண்டு சிப்ஸ், ஜூஸ் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களை சமைத்து அசத்தினர்.

மேலும் பலாப்பழத்தின் தேவை மற்றும் சுவையை மேலும் அதிகரிப்பதற்காக இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரே இடத்தில் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் தயாரிக்கப்பட்ட பல உணவு பொருட்கள் கிடைத்ததால் மக்கள் ஆர்வமுடன் இதில் பங்கேற்று, உணவுப் பொருட்களை ருசித்தனர். இந்த திருவிழாவில் பலாவை தென்னை மரத்தோப்பில் ஊடு பயிராக விவசாயம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என அப்பகுதி விவசாயிகள் கூறினர்.

First published: