கடலூரில் தந்தை உயிரிழந்ததை அறிந்தும் தேர்வு எழுதிய மாணவி 479 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி முடிவடைந்தது. இதில் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிஜா என்ற பிளஸ் 2 மாணவி ஏப்ரல் 3ஆம் தேதி வேதியியல் பாடம் தேர்வு எழுதினார்.
அன்று அதிகாலை தான் அவரது தந்தை ஞானவேல் திடீரென உடல்நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தையின் இறப்பு செய்தி கேட்டு கண்ணீர் வடித்த மகள், தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என எண்ணி விடிந்ததும் பள்ளிக்கு தேர்வு எழுத சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க | 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியா? கவலை வேண்டாம்.. துணை தேர்வு தேதி அறிவிப்பு
இன்று தமிழகத்தில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவி கிரிஜா 479 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் கிரிஜாவின் உறவினர்கள் அவரை ஆரத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தந்தை உயிரிழந்த போதும், சடலத்தை வீட்டில் விட்டுவிட்டு மன தைரியத்துடன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 12th Exam results, Cuddalore, Local News