முகப்பு /செய்தி /கடலூர் / காலையிலிருந்து உழைத்த காசு.... சாராய பாக்கெட்டை கொடுத்திடுங்க... காவல்துறையிடம் கண்ணீர் விட்ட மதுபிரியர்கள்

காலையிலிருந்து உழைத்த காசு.... சாராய பாக்கெட்டை கொடுத்திடுங்க... காவல்துறையிடம் கண்ணீர் விட்ட மதுபிரியர்கள்

மது பிரியர்கள் - கடலூர் மாவட்டம்

மது பிரியர்கள் - கடலூர் மாவட்டம்

புதுச்சேரியில் இருந்து சாராயம் குடித்துவிட்டு ஆட்டோவில் வந்த மது பிரியர்கள் சிலர் சாராய பாக்கெட்டுகளை காவல்துறைக்கு தெரியாமலும் எடுத்து வந்தனர்.

  • Last Updated :
  • Cuddalore, India

காலையிலிருந்து உழைத்த காசு... என்னோட சாராய பாக்கெட்டை என்னிடம் கொடுத்து விடுங்கள் என்று காவல்துறையிடம் கண்ணீர் விட்டு மது பிரியர்கள் கதறிய சம்பவம் வைரலாகி வருகிறது.

கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் மதுவிலக்கு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து சாராயம் குடித்துவிட்டு ஆட்டோவில் வந்த மது பிரியர்கள் சிலர் சாராய பாக்கெட்டுகளை காவல்துறைக்கு தெரியாமலும் எடுத்து வந்தனர்.

அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சாராய பாக்கெட்டுகளை எடுத்தவந்தவர்களிடம் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக எடுத்துக் கூறி யாரும் சாராயம் குடிக்க வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கினர். அப்போது மது பிரியர் ஒருவர் காலை முதல் நாங்கள் உழைத்த காசு, இலவச ஆட்டோன்னு வந்துட்டேன்.. என்னோட பாக்கெட் மட்டும் கொடுத்துடுங்க... என அழுது பாசாங்குகளை செய்தார்.

இதையும் வாசிக்கநீ எல்லாம் ஒரு போலீசா...?” - மதுபாட்டிலை பறிமுதல் செய்த போலீஸ்காரரை வசைபாடிய போதை நபர்...!

அது, காவல்துறையினரை செய்வதறியாது திகைக்க வைத்தது. மது பிரியர்கள் கண்ணீர் விட்டு அந்த சாராயப் பாத்திரங்களை கொடுத்து விடுங்க என காவல்துறையினரை கையெடுத்து கும்பிட்டனர்.

First published:

Tags: Cuddalore, Police case