முகப்பு /செய்தி /கடலூர் / காதலியை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம்.. மணக்கோலத்தில் கைதான மாப்பிள்ளை..!

காதலியை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம்.. மணக்கோலத்தில் கைதான மாப்பிள்ளை..!

மணக்கோலத்தில் கைதான மாப்பிள்ளை

மணக்கோலத்தில் கைதான மாப்பிள்ளை

Cuddalore Groom arrest | காதலியின் கருவை கலைத்து விட்டு அவருக்கு தெரியாமல் வேறொரு பெண்ணை நேற்று திருமணம் செய்துகொண்டார்.

  • Last Updated :
  • Cuddalore, India

கடலூரில் தன்னை ஏமாற்றி விட்டு திருமணம் செய்யப் போவதாக மணமகன் வீட்டில் விடிய விடிய காதலி போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் திருமண கோலத்தில் மாப்பிள்ளையை கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஆர்.எஸ். மணிநகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (31). மெக்கானிக்கான இவரும், எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்த ரம்யா (29) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதில் ரம்யா கர்ப்பம் அடைந்த நிலையில் கர்ப்பத்தை கலைத்தால் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அதை கலைத்து உள்ளார் சுப்பிரமணி.

மேலும் கடந்த 22ஆம் தேதி விழுப்புத்தில் உள்ள குலதெய்வ கோயிலில் வைத்து ரம்யாவை திருமணம் செய்து கொண்டார் சுப்பிரமணி. பின்னர் விழுப்புரத்தில் அறை எடுத்து தங்கி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் சுப்ரமணியனுக்கு கடலூரைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் திடீரென நிச்சயம் செய்யப்பட்டு நேற்று காலை திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் திருமணம் நடக்க இருந்தது.

இதனை அறிந்த ரம்யா பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை தேடி வந்த நிலையில், திருமணத்தை தடுத்து நிறுத்த கோரி பண்ருட்டியில் இரவு முழுக்க காதலன் வீட்டு முன்பு வாசலில் அமர்ந்து ரம்யா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

top videos

    ஆனால் திருவத்திபுரத்தில் இன்று நூற்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றதால் ஒவ்வொரு திருமணமாக சென்று அவரை தேடி வந்த நிலையில் அதற்குள் சுப்பிரமணிக்கு திருமணம் முடிந்து விட்டது. மணக்கோலத்தில் கோயிலில் இருந்து வெளியே வந்த சுப்பிரமணியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அதன்பிறகு அவரிடம் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    First published:

    Tags: Cheating case, Crime News, Cuddalore, Local News