முகப்பு /செய்தி /கடலூர் / “நீ எல்லாம் ஒரு போலீசா...?” - மதுபாட்டிலை பறிமுதல் செய்த போலீஸ்காரரை வசைபாடிய போதை நபர்...!

“நீ எல்லாம் ஒரு போலீசா...?” - மதுபாட்டிலை பறிமுதல் செய்த போலீஸ்காரரை வசைபாடிய போதை நபர்...!

கடலூர் போதை நபர்

கடலூர் போதை நபர்

Cuddalore Liquor issue | கள்ளச் சாராயத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டதை அடுத்து போலீசார் ஆங்காங்கே அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Last Updated :
  • Cuddalore, India

கடலூர் அருகே சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நடைபெற்ற விஷ சாராய உயிரிழப்பு சம்பவங்களைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சாராய விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார் சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக புதுவையில் இருந்து கடலூர் மாவட்டத்தை இணைக்கும் எட்டு சாலைகளில் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைத்து இரவு பகலாக போலீசார் புதுவையில் இருந்து கடலூருக்கு மதுபானங்கள் கொண்டு வருவதை தடுத்து வருகின்றனர். இதன் காரணமாக மது குடித்துவிட்டு கடலூருக்கு மதுவை வாங்கி வருபவர்கள் தொடர்ந்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

அவர்கள் கொண்டுவரும் சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றும் போலீசார் அங்கேயே அழித்து விடுகின்றனர். இதனால் தினம் தினம் மது குடித்துவிட்டு வருபவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை புதுவை மாநிலம் சோரியாங்குப்பம் பகுதியில் குடித்துவிட்டு சாராயப் பாக்கெட்டுகளை வாங்கி ஆட்டோவில் வந்து கொண்டிருந்த நபரை போலீசார் சாவடி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க; 10th ரிசல்ட் வெப்சைட் வேலை செய்யவில்லையா? உங்க செல்போனுக்கே மதிப்பெண்கள் வந்துவிடும்!

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் இந்த சாராய பாக்கெட்டை நான் கொண்டு வரவே இல்லை, என்ன ஆதாரம் இருக்கிறது, நீ எல்லாம் ஒரு போலீசா? என போலீசாரை பார்த்து கேள்வி எழுப்பினார். அத்துடன் நான் சாராய பாக்கெட் கொண்டு வரவே இல்லை. நுங்கு மட்டும்தான் வாங்கி வந்தேன். என கையில் வைத்திருந்த நொங்கு காட்டி ஒரு மணி நேரத்திற்கு மேலாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

top videos

    அதன்பிறகு அவரை சமாதானப்படுத்திய போலீசார் அவரது பெயர் மற்றும் விலாசத்தை குறித்துக் கொண்டு அனுப்பி வைத்தனர். போலீசாரின் சிறப்பு சோதனை சாவடியில் தினம் தினம் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுபவர்கள் அதிகரித்து வருகின்றனர்.

    First published:

    Tags: Cuddalore, Local News, Viral Video