முகப்பு /செய்தி /கடலூர் / தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம்!.. போர்வையை கயிறாக கட்டி ஜன்னல் வழியே எஸ்கேப்

தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம்!.. போர்வையை கயிறாக கட்டி ஜன்னல் வழியே எஸ்கேப்

அன்பு ஜோதி ஆசிரமம்

அன்பு ஜோதி ஆசிரமம்

Cuddalore missing | கடலூர் தொண்டு நிறுவனத்தில் தங்கியிருந்த 5 பேர் கதவை உடைத்து மாடியில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

  • Last Updated :
  • Cuddalore, India

அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து கடலூர் அழைத்துவரப்பட்டு தனியார் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்ட 5 பேர் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலிப்புலியூர் கிராமத்தில் அன்புஜோதி என்ற ஆசிரமம் செயல்பட்டு வந்தது. அந்த ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானோர் பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் ஆசிரமத்தில் இருந்து 15-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து அங்கு சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது.

அந்த ஆசிரமத்தில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டதும், அந்த ஆசிரமத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதும் மேலும் ஆசிரமத்தில் இருந்த 15-க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டதும் தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அந்த ஆசிரம நிர்வாகி ஜுபின் பேபி அவரது மனைவி மற்றும் ஆசிரமத்தில் பணிபுரிந்தவர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

top videos

    இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் ஆசிரமத்தில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கடலூரில் உள்ள தனியார் காப்பக்கத்தில் சேர்ககப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 25 பேர் கடலூரில் உள்ள காப்பகத்தில் கடந்த மாதம் 18ம் தேதி நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு இருந்தனர். கடலூர் தொண்டு நிறுவனத்தில் தங்கியிருந்த இவர்களில் 5 பேர் கதவை உடைத்து மாடியில் இருந்து போர்வையை கயிறாக மாற்றி அதன் வழியாக கீழே குதித்து தப்பியோடியுள்ளனர். தப்பியோடிய 5 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    First published:

    Tags: Crime News, Cuddalore, Local News