சிதம்பரத்தில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை நடத்தப்படவில்லை என்று தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தங்கள் குழந்தைகளுக்கு, குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் கடலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தேசிய குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் மற்றும் மருத்துவ குழுவினர் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மற்றும் குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்ட தீட்சிதர்களின் குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சிதம்பரத்தில் குழந்தை திருமணமே நடைபெறவில்லை என்றும் கட்டாயத்தின் பெயரில் தீட்சிதர்களின் குழந்தைகள் ஒப்புக்கொண்டதாகவும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறினார். இருவிரல் பரிசோதனை நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை ஆனால் குழந்தைகளின் அந்தரங்க பகுதிகள் தொடப்பட்டது உண்மை என்றும் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க... டிவி பார்ப்பதில் தகராறு : கிணற்றில் குதித்த மகளை காப்பாற்ற முயன்ற தந்தையும் நீரில் மூழ்கி பலி
குழந்தை திருமணம் நடைபெற்றதாக புகார் கூறியவர்களிடமும், விசாரணை மேற்கொண்டு அறிக்கையை 2 நாட்களுக்குள் ஆணையத்தில் சமர்ப்பிக்க இருப்பதாகவும் ஆனந்த் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chidambaram S22p27, Child marriage