முகப்பு /செய்தி /கடலூர் / சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்.. ஆளுநர் கருத்தை வரவேற்று தீட்சிதர்களின் வழக்கறிஞர் வெளியிட்ட வீடியோ

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்.. ஆளுநர் கருத்தை வரவேற்று தீட்சிதர்களின் வழக்கறிஞர் வெளியிட்ட வீடியோ

தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர்

தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர்

Chidambaram Natarajar Temple Issue | உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவரல் பரிசோதனையை காவல்துறை சம்பந்தப்பட்ட சிறுமியிடம் நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டு

  • Last Updated :
  • Chidambaram, India

உச்சநீதிமன்றம் தடை விதித்த இருவிரல் பரிசோதனை சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தைகள் மீது நடத்தக்கூடாது என தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள வீடியோவில். “ சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொறுத்தவரை தமிழக அரசு அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக கடந்த ஒரு வருடமாக பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டு வருவதாகவும் அதற்கு பொது தீட்சிதர்கள் சார்பில் பதில்கள் அனுப்பி வருவதாக கூறினார். கடந்த அக்டோபர் மாதம் சில தீட்சிதர்களுக்கு எதிராக சிறார் திருமண சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் வழக்குகள் பதியப்பட்டது மட்டுமல்லாமல் அந்த வழக்குகளில் சில தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் கைது  நடவடிக்கை இந்த வழக்குகளில் தேவையில்லாத ஒன்றாகும் எனவும் உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனையை காவல்துறை சம்பந்தப்பட்ட சிறுமியிடம் நடத்தியுள்ளதாகவும் இதுதொடர்பாக நேஷனல் சைல்ட் ரைட் கமிஷனுக்கும் தமிழக உள்துறை செயலாளர், தமிழக தலைமை காவல்துறை அதிகாரிக்கும் பொது தீட்சிதர்கள் சார்பில் மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: நெல்லையில் நர்ஸ் கொலை.. நடுரோட்டில் கணவனே பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற கொடூரம்

பொது தீட்சிதர்கள் எப்பொழுதும் இந்த அரசாங்கம் இயற்றிய சட்டத்தை மதிக்கின்றவர்கள் எனவும் அதை மீறி செயல்படவில்லை, கோவில் பூஜை செய்வதற்கு 21 வயதுடைய திருமணமான ஆண் தான் தேவை. தவிர 21 வயதுக்கு குறைந்த மைனர் சிறுமிக்கு சிறுவனுக்கோ திருமணமானால் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற பொய்யான பிரச்சாரம் நடைபெற்று வருவதாகவும் அது தவறு என்பதையும் தெரிவித்துள்ளதாக கூறினார்.

மேலும் இந்த வழக்கில் மனித உரிமை மீறலும் குழந்தை உரிமை மீறலும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்து அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த வழக்குகளை தமிழ்நாடு காவல்துறை விசாரிக்க கூடாது இந்த வழக்கில் மத்திய புலனாய்வுத் துறை மூலம் மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என மனு அளித்துள்ளதாக தெரிவித்த சந்திரசேகரன், தமிழக ஆளுநரே தற்பொழுது இருவிரல் பரிசோதனை மைனர் குழந்தைகளிடம் நடத்தக்கூடாது என்று ஒரு பொதுவெளியில் அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார்.

இதையும் படிங்க: பேருந்தில் இருந்து கீழே விழுந்து இளம்பெண் பலி.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தில் இருவிரல் சோதனை நடத்தக் கூடாது அவ்வாறு இருவிரல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் சிறுமி வாழ்நாள் முழுவதும் தனக்கு நடந்ததை நினைத்து வருந்தக்கூடும் எனவே இத்தகைய கடுமையான சோதனையை நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும் அந்த தடையை மீறி சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் காவல்துறையினர் தமிழக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார்.

top videos

    தற்பொழுது தமிழக ஆளுநரே நடந்த விஷயத்தை பொதுவெளியில் சொல்வதால் இனிமேல் கொண்டு தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனைகளை காவல்துறை தவிர்க்கும் என்றும் காவல்துறை  மனித உரிமைகளை மதித்து நடக்க வேண்டும் என வழக்கறிஞர் சந்திரசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    First published:

    Tags: Cuddalore, Local News, Tamil News