முகப்பு /செய்தி /கடலூர் / இருவிரல் பரிசோதனை விவகாரம் குறித்து உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும்- தீட்சிதர்களின் வழக்கறிஞர் கோரிக்கை...

இருவிரல் பரிசோதனை விவகாரம் குறித்து உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும்- தீட்சிதர்களின் வழக்கறிஞர் கோரிக்கை...

நடராஜர் கோயில் வழக்கறிஞர்

நடராஜர் கோயில் வழக்கறிஞர்

NATARAJAR TEMPLE ADVOCATE | சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகள் திருமணம் நடைபெற்றது குறித்து நேற்று புகைப்படங்கள் வெளியானது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Cuddalore, India

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் குழந்தைகளிடம் இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டதா? இல்லையா? என்பதை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும் என நடராஜர் கோவில் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகள் திருமணம் நடைபெற்றது குறித்து நேற்று புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ’கடந்த சில தினங்களாக குழந்தைக்கு தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை நடைபெற்றதா என்று தேசிய ஆணையத்தினுடைய உறுப்பினர் விசாரணை செய்தார். மேலும் அது சம்பந்தமான செய்திகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டு வரும் நிலையில் பொது தீட்சிதர்களின் குழந்தைகளுடைய புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளனர். இது சட்டத்திற்கு எதிரான செயலாகும்.

வழக்கு நிலுவையில் உள்ள போது கடந்த ஆண்டு அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் பதியப்பட்ட வழக்குக்கு தற்போது எதற்காக இந்த புகைப்படத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

பெண் குழந்தையினுடைய வழக்கை தமிழக காவல்துறை விசாரணை செய்யக்கூடாது. மத்திய புலனாய்வு விசாரணை செய்ய வேண்டும் என்பதை கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து  வலியுறுத்தி வருவதாகவும் அந்தக் கோரிக்கை வலுப்பெறும் வகையில் தான் தற்பொழுது பெண் குழந்தையினுடைய புகைப்படங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக காவல்துறை இந்த வழக்கை விசாரிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை. அவர்கள் இந்த வழக்கை விசாரிப்பதற்கு எந்தவித தார்மீக பொறுப்பும் இல்லை என்பதை இது நிரூபிக்கிறது.

சிறார் பிரச்சினை தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய முகாந்திரம் உள்ளது. எனவே இந்த பிரச்சனையில் சிறார்களுக்கு தடை செய்யப்பட்ட பரிசோதனை நடைபெற்றதா இல்லையா என்பதை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

ALSO READ | ‘தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி’ – ரஜினிகாந்த் ட்வீட்…

அதுவரை இந்த வழக்குகளில் உள்ள ஆவணங்கள், சிறார்களின் புகைப்படங்களை வெளியிடக்கூடாது. அதேபோல இருவிரல் பரிசோதனை நடைபெற்றதா? இல்லையா? என்பது குறித்து பொதுவெளியில் சர்ச்சை ஏற்படுத்தக் கூடாது. செய்தி வெளியிடக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தால் தான் பாதிக்கப்பட்ட தரப்பிற்க்கு நியாயம் கிடைக்கும்.

எனவே நீதிமன்ற விசாரணையில் தான் உண்மை வெளிப்படும். அதுவரை வரை எந்த தரப்பும் முக்கியமாக தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை, சிறார்களின் புகைப்படங்கள் வெளியிடுவது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். அதனை தவிர்க்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இதையும் படிங்க | உணவுக்கு வழியில்லை.. தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த 3 இலங்கை தமிழர்கள்..

கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்ட வழக்கிற்கு அப்போது வெளியிடப்படாத புகைப்படங்கள் தற்பொழுது தேசிய ஆணையம் இருவிரல் பரிசோதனை தொடர்பாக விசாரணை செய்த பிறகு ஏன் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய குழந்தைகள் ஆணையத்தின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது உள்நோக்கத்துடன் தங்கள் மீது உள்ள தவறை மூடி மறைப்பதற்காக தான் இந்த காவல்துறை மூலம் தமிழக அரசு சிறார் சம்பந்தமான புகைப்படங்களை வெளியிடுகிறது. இது சட்டத்திற்கு புறம்பானது’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: Chidambaram Constituency, Local News