முகப்பு /செய்தி /கடலூர் / சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளவில்லை- அரசு மருத்துவ சங்க மாநிலத் தலைவர் விளக்கம்!

சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளவில்லை- அரசு மருத்துவ சங்க மாநிலத் தலைவர் விளக்கம்!

அரசு மருத்துவ சங்க மாநில தலைவர்

அரசு மருத்துவ சங்க மாநில தலைவர்

Cuddalore news | தீட்சிதரின் மகள்களுக்கு இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்று அரசு மருத்துவ சங்கத் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

  • Last Updated :
  • Cuddalore, India

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சதர்கள் அவர்களது குழந்தைகளுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்த வழக்கில் அரசு மருத்துவர்களை அச்சப்படுத்த இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தவறான கருத்தை தெரிவிப்பதாக அரசு மருத்துவ சங்க மாநிலத் தலைவர் கூறியுள்ளார்.

சிதம்பரம் தீட்சிதர் குழந்தைகளுக்கு தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் குறித்து பேசிய அரசு மருத்துவ சங்க மாநிலத் தலைவர் சாமி நாதன், ‘கடந்த செப்டம்பர் மாதம் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சதர்கள் அவர்களது குழந்தைகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். குழந்தை திருமணம் சம்பந்தமாக புகார்கள் வந்து அதன் அடிப்படையில் காவல் துறையினர் இரண்டு சிறுமிகளை, கடலூர் அரசு மருத்துவமனை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர். கடலூர் மற்றும் சிதம்பரம் மருத்துவ மகப்பேறு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு சான்றிதழ் வழங்கினர்.  அந்த மகப்பேறு மருத்துவர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு அந்த பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கினர்.

இந்த நிலையில் நேற்று திடீரென சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதாக வெளியான செய்தி ஏற்புடையதல்ல. உச்ச நீதிமன்ற நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இரு விரல் பரிசோதனை என்பது பல வருடங்களுக்கு முன்பே கைவிடப்பட்ட ஒன்று. இந்த நிலையில் இது போல் பரிசோதனை செய்யப்பட்டது என கூறுவது ஏற்புடையதல்ல.

இந்த குற்றச்சாட்டை வைக்க காரணம் என்னவென்றால் திருமண தடை சட்டத்தை மீறி குழந்தை திருமணம் செய்துள்ளார்கள். இதனை காவல்துறையினர் விசாரணை மூலம் கொண்டு வந்து மருத்துவர்கள் பரிசோதனை மூலம் வெளிப்படுத்தி உள்ளனர்.

மருத்துவர்கள் வழக்கு தொடர்பாக சாட்சியாக வருவார்கள் அப்போது அவர்கள் நீதிமன்றத்தில் இது குறித்து பேச அச்சப்பட வேண்டும் என பயமுறுத்தவே இதுபோல் இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதாக குற்றம் வைக்கப்படுகிறது.

ALSO READ | சிதம்பரம் தீட்சிதர் குடும்ப சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனையா...? ஆளுநருக்கு காவல்துறை விளக்கம்..!

குழந்தை திருமணம் என்பது சமுதாய சீர்கேடாகும்.

அதற்கு எதிரான சட்டங்கள் இருந்தும் அது நடைபெற்று வருகிறது.

top videos

    இந்த நிலையில் மருத்துவர்கள் மீது இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என கூறுவது அதற்கான தடங்கல்களை ஏற்படுத்துவது நல்லதல்ல. எனவே இது போன்ற சமுதாய சீர்கேடான குழந்தை திருமணத்தை, பெண் குழந்தைகளின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயத்தை பேசும்பொழுது அதுவும் குறிப்பாக பொறுப்புகளில் இருப்பவர்கள் பேசும் போதும் அறிக்கை வெளியிடும் போது என்ன நடந்தது என்பதனை முழுமையாக தெரிந்து கொண்டு விசாரணையை தெரிந்து கொண்டு பேசவேண்டும். அதற்கு மாறாக நிரூபிக்கப்படாத உண்மை இல்லாத விஷயத்தை பொதுவெளியில் பேசுவது வெளியிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Chidambaram Constituency, Cuddalore, Local News