முகப்பு /செய்தி /கடலூர் / என்.எல்.சி.க்கு நிலம் வழங்கிய 51 பேருக்கு கூடுதல் இழப்பீடு...

என்.எல்.சி.க்கு நிலம் வழங்கிய 51 பேருக்கு கூடுதல் இழப்பீடு...

மாதிரி படம்

மாதிரி படம்

NLC Land Issue | என்.எல்.சி.க்கு நிலம் வழங்கிய 51 பேருக்கு ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் கூடுதல் இழப்பீடாக வழங்கப்பட்டது.

  • Last Updated :
  • Neyveli, India

கடலூர் மாவட்டத்தில் கத்தாழை, காரிவெட்டி, கீழ் வளையமாதேவி, மேல் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணிகளுக்காக கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.

இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்...

இந்நிலையில், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஏற்பாட்டில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் முதல் கட்டமாக, கடந்த மாதம் 6ஆம் தேதி 3.15 ஹெக்டேர் நிலம் வழங்கிய பயனாளிகள் 9 பேருக்கு, மொத்தம் 23,34,000 ஆயிரம் ரூபாய் கூடுதல் இழப்பீடாக வழங்கியது. அதைத்தொடா்ந்து, இரண்டாம் கட்டமாக 16.7 ஹெக்டேர் நிலம் வழங்கிய 51 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை என்.எல்.சி. இந்தியா நிறுவன நிலத்துறை அதிகாரிகள் வழங்கினா்.

top videos
    First published:

    Tags: NLC