முகப்பு /செய்தி /கடலூர் / கடலூரில் காவல் நிலையத்திலே பெண் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி

கடலூரில் காவல் நிலையத்திலே பெண் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் உதவி காவல் ஆய்வாளர்

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் உதவி காவல் ஆய்வாளர்

காவல் நிலையத்தில் இருக்கும்போதே தற்கொலைக்கு முயன்றுள்ளார்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Cuddalore, India

கடலூர் மாவட்டத்தில் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண் உதவி காவல் ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சுகன்யா பணியாற்றி வந்தார். இவர், விழுப்புரம் காவலர் பயிற்சி பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவதாக உத்தரவு வந்தது. பணியிட மாற்றத்திற்காக காரணம் குறித்து, உயரதிகாரிகளிடம் சுகன்யா கேட்டபோது, எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: சீரியல் கொலையா? 6 இளம் பெண்கள் அடுத்தடுத்து மர்ம மரணம்.. அமெரிக்காவில் மக்கள் பீதி!

 இதனால் மனமுடைந்த உதவி காவல் ஆய்வாளர் சுகன்யா, காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோதே அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை, சக காவலர்கள் மீட்டு, புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

First published:

Tags: Cuddalore