முகப்பு /செய்தி /கடலூர் / டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுவன் மரணம்: திட்டக்குடி அருகே சோகம்!

டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுவன் மரணம்: திட்டக்குடி அருகே சோகம்!

தகவல் அறிந்து சென்ற திட்டக்குடி காவல்துறையினர், சிறுவனின் உடலை கைப்பற்றி கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

தகவல் அறிந்து சென்ற திட்டக்குடி காவல்துறையினர், சிறுவனின் உடலை கைப்பற்றி கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

தகவல் அறிந்து சென்ற திட்டக்குடி காவல்துறையினர், சிறுவனின் உடலை கைப்பற்றி கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Cuddalore |

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே 17 வயது சிறுவன் ஓட்டிய டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

பெருமுளை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் புதிதாக டிராக்டர் வாங்கியுள்ளார். இந்த டிராக்டரை தனது விவசாய நிலத்திற்கு எடுத்து சென்றபோது, அவரது அக்கா மகனான 17 வயது சிறுவன் அதனை இயக்க ஆசைப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அந்த சிறுவன் டிராக்டரை இயக்கிய நிலையில், வலதுபுறத்தில் மணிகண்டனும், இடது பக்கத்தில், மற்றொரு சிறுவனான வரதராஜனும் அமர்ந்துள்ளார்.

விளைநிலத்தில் இயக்கப்பட்ட டிராக்டர், வரப்பு மேட்டில் ஏறி இறங்கிய போது, அதில் அமர்ந்திருந்த 10 வயது சிறுவன் வரதராஜன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில், டிராக்டரின் பின்சக்கரத்தில் சிக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

இதையும் வாசிக்கமின்கம்பத்துடன் கட்டப்பட்ட கால்வாய்... நியூஸ் 18 செய்தி எதிரொலியால் 24 மணி நேரத்தில் மாற்றியமைக்க உத்தரவிட்ட ஆட்சியர்

தகவல் அறிந்து சென்ற திட்டக்குடி காவல்துறையினர், சிறுவனின் உடலை கைப்பற்றி கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

First published:

Tags: Cuddalore, Death